
சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி செயலாளர் திலீபன்ராஜா தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்று ஆண்டறிக்கையை சமர்பித்தார். சிறப்பு விருந்தினர், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப் பாளர் சபரிநாதன் கலந்து கொண்டார்.
விழாவில் கடந்த ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற மாணவி செல்வகுமாரிக்கு கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ரூ. ஆயிரம் ரொக்க பரிசை வழங்கினார். தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி சீதாலட்சுமிக்கு கல்லூரியின் முன்னாள் தமிழ் பேராசிரியர் முருகேசபாண்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. வணிகவியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கலாமணிக்கு கல்லூரியின் முன்னாள் நிர்வாகி ராஜசேகரன் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
ஆங்கில பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கவிஇந்திரா, கணிதப்பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி துர்காதேவி, வரலாற்று பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கனகராஜ், அறிவியல் துறையில் முதலிடம் பெற்ற மாணவி கள் தேவி, ஜனனி, மேனகா தேவி, கணிப்பொறி பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி காளீஸ்வரி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கலை இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பின்பு கல்லூரி அளவில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் சந்துருவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற மாணவி அட்சயாவுக்கும் மாணவன் கார்த்திக்ராஜாவுக்கும் நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
கல்லூரியில் பணிபுரியும் நிர்வாக அலுவலர், முதல்வர் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கல்லூரி செயலாளர் நினைவுப்பரிசு வழங்கினார். முடிவில் பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவிகள் மாதேஸ்வரி, முத்துப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

