Police Department News

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய தம்பதியை மீட்டு மருத்துவமனை கொண்டு சேர்த்த மாவட்டக் கண்காணிப்பாளர்

விழுப்புரம்: கடந்த 22.12.2017 அன்று இரவு மாரிமுத்து மற்றும் அவரது மனைவி இருசாயி ஆகியோர் தங்கள் இரு சக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சியிலிருந்து மூரார்பாளையம் நோக்கி செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து அப்பகுதி மக்கள் அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்து காத்திருந்தனர். அந்த நேரத்தில் சங்கராபுரம் காவல்நிலையத்தில் ஆய்வு முடித்து விட்டு அவ்வழியாக […]

Police Department News

மதுரையில் (POCSO ACT) விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாநகர் கீரைத்துரை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ரெஜினா அவர்கள் சார்பில் அருப்புகோட்டை நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சமூக குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பு சட்டம் (POCSO ACT) பற்றிய விளக்கம், சிறார்கொடுமை, குழந்தைக் கடத்தல், குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்புமுறை, இணையதள பயன்பாடு (முகநூல், வாட்ஸ்-அப்) மற்றும் இணையதள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2600 மாணவிகள் கலந்து கொண்டு […]

Police Department News

குடியிருப்புக்குள் புகுந்த 74 பாம்புகளை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்த, பல்வேறு வகையான, 74 பாம்புகளை, வனத் துறையினர் பிடித்து, காப்புக் காட்டில் விட்டனர். கிருஷ்ணகிரி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட தட்டக்கல், காவேரிப்பட்டணம், பர்கூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில், நாகப் பாம்புகள், மலைப்பாம்புகள் புகுந்ததாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வனத் துறையினர், ஒன்பது மலைப்பாம்புகள், ஒரு கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர், நாகேஷ் கூறியதாவது: குடியிருப்பு பகுதிகளில், பாம்புகள் […]

Police Department News

சசிகுமார் கொலையில் தேடபட்ட குற்றவாளி கைது பழிக்குப்பழியாக செய்ததாக பரபரப்பு தகவல்

கோயம்புத்தூர்: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த முபாரக் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜன.9-ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் சுப்பிரமணியம் பாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார்(36). இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த இவர், கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி துடியலூர் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பையும், வன்முறையையும் ஏற்படுத்தியது. அதையடுத்து இந்த வழக்கு […]

Police Department News

புதுமை செய்வோம்”சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் முனைவர் . A.K. விஸ்வநாதன் IPS அவர்கள் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

சென்னை: ‘காவல்துறை பொதுமக்களின் நண்பன்’ என்ற சொல்லிற்கேற்ப சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்களின் நல்லிணக்க முயற்சியாக, பொதுமக்களுக்கும் காவல்துறைக்குமான உறவை மேம்படுத்தும் வகையில் மாங்காடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கோவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர்களில் தேசத்தலைவர்களின் படங்கள், ஓவியங்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறந்த வாசகங்கள் ஆகியவற்றை சென்னை பெருநகரக் காவலின் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் திரு. R. மதுசூதனன் மற்றும் திரு. S. […]

Police Department News

ரூ.20 நோட்டுகள் மூலம் பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது

சென்னை ஆர்.கே.நகரில், வாக்களித்தவர்களுக்கு பணம் கொடுக்க 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்ததாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் 450 பேருக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாக எழுதி வைக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆர்.கே.நகருக்கு உட்பட்ட கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகரில் தேர்தலுக்கு முன்னதாக சிலர் 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்ததாகவும், தேர்தல் முடிவு வந்தபின்னர் டோக்கன் கொடுத்தவர்களை மடக்கி பணம் கேட்டு சிலர் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. […]

Police Department News

லட்சுமி விலாஸ் வங்கியில் கொள்ளை முயற்சி

அரியலூர் லட்சுமி விலாஸ் வங்கியில் நடைபெற்ற கொள்ளை முயற்சியில் லாக்கரை உடைக்க முடியாததால் பலகோடி ரூபாய் மதிப்பிலான் பணம் நகைகள் தப்பின. 3 நாள் வங்கி விடுமுறைக்குப் பின் இன்று வங்கியைத் திறக்க வந்த மேலாளர் கேட்டின் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து போலீசார் வந்தபோது வங்கியின் பக்கவாட்டு ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு கொள்ளையர்கள் நுழைந்தது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்திய போலீசார், வங்கியின் […]

Police Department News

ராணுவ ‘குரூப்-சி’ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

இந்திய ராணுவத்தில் ‘குரூப்-சி’ பணியிடங்களுக்கு 818 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இந்திய ராணுவத்தில் ‘குரூப்-சி’ தொகுதியின் கீழ் அடங்கியுள்ள கிளார்க், ஸ்டெனோகிராபர், தீயணைப்பு வீரர்கள், உதவியாளர்கள், பிட்டர், டெய்லர், பெயின்டர், எலக்ட்ரீஷியன், கார்பென்டர், சமையல் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணியிடங்களின் மொத்த காலி எண்ணிக்கை 818. இடஒதுக்கீடுப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். www.aocrecruitment.gov.in என்ற இணையதளம் மூலம் […]