இந்திய அளவில் சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்எஸ் புரம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த காவல் நிலையத்துக்கான பதக்கத்தை ஆய்வாளர் ஜோதி பெற்றுக்கொண்டார். கான்பூரில் நடைபெற்ற காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதக்கம் வழங்கினார்.
Day: January 7, 2018
குளித்தலை அருகே பேருந்தை சேதப்படுத்தியதாக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசுப் பேருந்து கண்ணாடிகளை உடைத்ததாக கைது செய்யப்பட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். நச்சலூரில் இருந்து குளித்தலை நோக்கி சென்ற பேருந்தின் பின்பக்க கண்ணாடிகளை நங்கவரம் அருகே மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேருந்தை ஓட்டிவந்த தற்காலிக ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் வசித்து வரும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரை குளித்தலை காவல்துறையினர் கைது செய்தனர்
சென்னை வழியாக கடத்த முயன்ற ரூ.60 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது
சென்னை: கர்நாடகாவில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக லாரி மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் கடத்த இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து நேற்று காலை கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டைக்கும், தச்சூருக்கும் இடையே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான லாரி […]