தஞ்சாவூர் அருகே மனநல மருத்துவமனை வார்டனை கொலை செய்துவிட்டு, தப்பியோடிய குடி நோயாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தை அடுத்த சென்னம்பட்டி கிராமத்தில் மனநல மருத்துவர் ராதாகிருஷ்ணன் என்பவர், மனநல மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், குடி போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மையத்தில் உள்நோயாளிகளாக சுமார் 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகில் உள்ள உக்கடை கிராமத்தைச் சேர்ந்த ஜோதிராமலிங்கம் (45) […]
Day: January 5, 2018
ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு குற்றவாளி கைது: 24 ஆண்டுகளுக்குப் பின் சிபிஐ பிடித்தது
993-ல் 11 பேர் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்த சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்பு வழக்கில் 24 ஆண்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை சிபிஐ கைது செய்துள்ளது. சேத்துப்பட்டு ஹாரிங்கடன் சாலையில் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று மதியம் 1.45 மணி அளவில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். கட்டிடம் சேதமடைந்தது. இந்த வழக்கு பற்றி எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தினர், பின்னர் […]
மதுரையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் 24 மணிநேரத்தில் கைது
மதுரை: மதுரை மாநகர் B3-தெப்பக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முனிச்சாலை, இஸ்மாயில்புரம் 7வது தெருவில், ரபீக் ராஜா என்ற வாழைக்காய் ரபீக் (41) என்பவர் அவரது வீட்டின் அருகே வைத்து 03.01.2018 அன்று அவரது மனைவி சைபுநிஷா முன்பு அடையாளம் தெரிந்த நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி சைபுநிஷா (35) என்பவர் அளித்த புகாரின்பேரில் டB3-தெப்பக்குளம் காவல் நிலையத்தின் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் […]
மதுரையில் பயங்கரம் பழிக்குபழியாக ரவுடியை வெட்டி கொலை செய்த கும்பல்
மதுரை: மதுரை முனிச்சாலை, இஸ்மாயில்புரம் 7-வது தெருவைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் மகன் ரபீக் ராஜா என்ற வாழைக்காய் ரபீக்(41), ஜவுளி வியாபாரி. இவர் மீது வெடிகுண்டு வழக்கு, கொலை வழக்கு என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்பேட்டையைச் சேர்ந்த மன்னர் மைதீன், அவரது அண்ணன் மகன் முகமதுயாசின் ஆகியோரை ரபீக் ராஜா கொலை செய்தார். எனவே மன்னர் மைதீனின் உறவினர்கள் ரபீக் ராஜாவை கொலை செய்ய நேரம் பார்த்து […]
விழுப்புரத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், 25; பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி இவர், நண்பர் சுரேஷ், என்பவருடன் மோட்டார் பைக்கில் சென்றபோது, ராதாபுரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த விக்ரவாண்டி காவல் ஆய்வாளர் திரு.இளஞ்செழியனை கத்தியால் குத்தினார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து, வினோத்குமாரை கைது செய்தனர். இவர், கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், அவரது நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், வினோத்குமாரை, குண்டர் தடுப்பு […]
காஞ்சிபுரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த, மாமண்டூர் பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக, காவல்துறையினருக்கு தகவல் வந்தது. நேற்று முன்தினம், படாளம் காவல்துறையினர், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணல் கடத்தி வந்த மூன்று மாட்டு வண்டிகளை மடக்கினர். விசாரணைக்கு பின், வடபாதியைச் சேர்ந்த மணிமாறன், (31) தாமோதரன், (34) விஸ்வநாதன், (29) ஆகியோரை கைது செய்தனர்; மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் உட்கோட்ட காவல் நிலையப் பகுதியில், மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், வௌ;வேறு இடங்களில் நான்கு பெண்களிடம் தாலி செயினை பறித்துச் சென்றனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன், மரக்காணம் காவல் ஆய்வாளர் வளர்மதி, தனிப்படை உதவி- ஆய்வாளர் திரு.செல்வம், ஏட்டு திரு.முனுசாமி, திரு.முகமதுஷபி ஆகியோர் மடக்கி பிடித்தனர். விசாரணையில், வழிபறியில் ஈடுபட்டவர்கள் சென்னையைச் சேர்ந்த மெய்தீன் மகன் ஷாதிக்பாஷா, 23, கொல்கத்தா பகுதியைச் சேர்ந்த ஜோசப்ராஜ் மகன் பிரேம்ஜோசப், 25, […]