Police Department News

மனிதநேயமிக்க காவலர்- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திருச்சுழி சாலையில் 25/2/18 ஞாயிறு காலை 10.00 மணியளவில் முத்திரையர் சிலை திறப்புவிழா நடைபெற்றது

கூட்டம் அதிமாக இருக்கும் என கருதி காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலையில் மணிபர்ஸ் ஒன்று அனாதையாக இருந்ததை காவல் துறை யினர் பார்த்து அதை சோனை செய்தபோது 5000 ரொக்கமும் 3 ATM அட்டையும் Driving licence இருந்தது அதில் உள்ள முகவரியை தொடர்பு கொண்டு பணத்தின் உரிமையாளரை அழைத்து முழுமையாக ஒப்படைக்கப்பட்டது வாழ்க காவல் துறை வளர்க எழுச்சியூட்டும் பொதுமக்களின் நலனுக்காக கண் அயராது என்றும் உன்னதமாய் செயல்படும் நமது காவல் துறைக்கு […]

Police Department News

திருவான்மியூரில் பெண் ராணுவ அதிகாரியிடம் செல்போன் பறிப்பு: போக்குவரத்து நெரிசலால் சிக்கிய இளைஞர்கள் கைது

திருவான்மியூரில் பெண் ராணுவ அதிகாரியிடம் செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பறந்த இளைஞர்கள் போக்குவரத்து நெரிசலால் போலீஸாரிடம் சிக்கினர். சென்னை ராணுவ தலைமையகத்தில் கேப்டனாக இருப்பவர் சிம்ரன் பேடி சேத்துப்பட்டில் வசிக்கிறார். இவர் நேற்று மாலை திருவான்மியூர் கலாசேத்ரா சாலையில் தனது நண்பரை பார்க்க வந்துள்ளார். பின்னர் வீடுதிரும்ப அவர் வெளியே சாலைக்கு வந்தபோது, அவரிடமிருந்த செல்போனை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் பறித்து சென்றனர். அப்போது இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த இளைஞர்களை துரத்தினர். ஆனால் […]

Police Department News

பாளையங்கோட்டையில் தாக்குதல்: உதவி பேராசிரியர் படுகொலை

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வீடு மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல், தனியார் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியரை குத்திக் கொலை செய்தது. தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி விஜயலெட்சுமி. புதிய தமிழகம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த குமார், அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது […]

Police Department News

திருக்கோவிலூர் அருகே தலித் சிறுவன் கொலையான சம்பவம்: தாய், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக புகார்- ஆதிதிராவிடர் நல தேசிய ஆணையத்தின் அதிகாரி ஆய்வு

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தலித் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது, அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு மனைவியும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். மேலும், சமயன் என்ற 4-ம் வகுப்பு படித்துவந்த மகன் இருந்தார். கடந்த 21-ம் தேதி நள்ளிரவில் இவர்களது வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் மனைவி, மகள் […]

Police Department News

இந்தக் குடிகார அப்பா எனக்கு வேண்டாம்”: காவல் நிலையத்தில் கதறிய 11 வயது சிறுவன் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்வதாகவும் போலீஸார் உறுதியளித்தனர்

மது அருந்திவிட்டு தினமும் தம்மை அடித்து துன்புறுத்தும் குடிகார அப்பா தனக்கு வேண்டாம் என தெலங்கானா மாநிலத்தில் 11 வயது சிறுவன், காவல் நிலையத்தில் கதறி அழுத சம்பவம் போலீஸாரை நெகிழச் செய்தது. தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மாத்கால கூடம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். கூலித் தொழிலாளியான இவருக்கு, ரம்யா என்ற மனைவியும், சசிகுமார் (11) என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சசிகுமார், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு […]

Police Department News

ஆசிட் வீசப்பட்டு எரிக்கப்பட்ட மடிப்பாக்கம் யமுனா சிகிச்சை பலனின்றி மரணம்: ரத்த பரிசோதனை மைய உரிமையாளர் கைது

மடிப்பாக்கத்தில் செவிலியராக பணியாற்றிய  யமுனா என்பவரை ரத்தப் பரிசோதனை மைய உரிமையாளர் ஆசிட் ஊற்றி எரித்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் ஸ்ரீ பாலாஜி ரத்தப் பரிசோதனை மையம் என்ற தனியார் ரத்தப் பரிசோதனை நிலையம் உள்ளது. இதன் உரிமையாளர் ராஜா (40), இவரது ரத்தப் பரிசோதனை மையத்தில் யமுனா (33) செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 19 பிப்ரவரி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் […]

Police Department News

துணை முதல்வரின் சகோதரர் பெயரைக்கூறி திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.1 கோடி பறிக்க முயன்ற 5 பேர் கைது

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள வி.என்.நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (36). இவர் திருச்சி, மதுரை, உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 21-ம் தேதி திருச்சியில் உள்ள இவரது அலுவலகத்துக்கு வந்த சிலர், தங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவின் ஆட்கள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். பின்னர், அம்மா ஸ்கூட்டர் மானியம் திட்ட தொடக்க விழா செலவுக்காக பணம் தேவைப்படுவதாகக் கூறி கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து ஒன்றரை லட்ச […]

Police Department News

திருவில்லிபுத்தூர் ஜீயருக்கு மீண்டும் மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் திருவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜருக்கு 2-வது முறையாக நேற்று மிரட்டல் கடிதம் வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஜன.7-ல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கவிஞர் வைரமுத்து, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திருவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் 2 முறை உண்ணாவிரதப் […]

Police Department News

காஞ்சிபுரம், முதியோருக்கான கருணை இல்லத்தில் மத்திய உளவுப் பிரிவு ஐ.ஜி பத்மநாபன் தலைமையில் 5பேர் கருணை இல்லத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசப் ஆதரவற்றோருக்கான கருணை இல்லத்தில் இறக்கும் முதியோரைக் கல்லறையில் அடைத்து வைத்து, அதில் எஞ்சும் எலும்புகள் விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளன. இது குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் நிலையில் இன்று கருணை இல்லத்தின் நிர்வாகியான பாதிரியார் தாமசிடமும், அங்குள்ள முதியோர்களிடமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினர். […]

Police Department News

நெல்லை அருகே 45 வயது மதிக்கத்தக்கவர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை

நெல்லை அருகே 45 வயது மதிக்கத்தக்கவரை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். உடையார்பட்டி வடக்கு புறவழிசாலை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவரின் கையில் முருகன் என பச்சை குத்தி இருந்தது. நேற்று இரவு கும்பலாக வந்து […]