ரேடியோ ஜாக்கியாக பணியாற்றும் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக பிரபல பாடகர் ‘கஜல்’ ஸ்ரீநிவாஸை ஹைதராபாத் போலீஸார் நேற்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தை சேர்ந்தவர் ‘கஜல்’ ஸ்ரீநிவாஸ் (51). பிரபல பாடகரான இவர் தெலுங்கு படங்களில் பாடியுள்ளார். காந்தியத்தை அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் 125 உலக மொழிகளில் காந்தியத்தை கஜலில் பாடினார். இதன் மூலம் 2 முறை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் ஒரு முறை லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார். ஹைதராபாத்தில், […]
Day: January 3, 2018
கடத்தல்காரர்கள் தாக்கியதில் போலீஸ் காவலர் காயம் சேஷாசலம் வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு: ரூ.1.5 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்
திருப்பதி வனப்பகுதியில் நேற்று அதிகாலைஅதிரடிப்படையினர் மீது செம்மர கடத்தல் கும்பல் கற்களாலும், கத்தியாலும் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். கடத்தல்காரர்களை விரட்ட துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 32 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று அதிகாலை அதிரடிப்படையினர் ரிசர்வ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்ரீவாரி மெட்டு பகுதியில், தேவுன்னி குடி என்கிற இடத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 60 பேர் அடங்கிய கும்பல், செம்மரங்களை […]
ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி உட்பட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி உட்பட ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் எஸ்பி அந்தஸ்து ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்ட அதிகாரிகள் விபரம் 1.கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளரான துரை ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். 2. ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து ப்ரவீன் குமார் சிபிசிஐடி எஸ்பியாக […]
வேலூர் மாவட்டத்தில் 2017-ல் 718 குற்றவாளிகள் கைது, சாலை விபத்தில் 637 பேர் பலி
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 2017 ஆண்டில் மட்டும் 718 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ பகலவன் தெரிவித்து உள்ளார் வேலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 774 ரவுடிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, 718 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான 56 ரவுடிகளை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 368 பேரில் கடந்தாண்டு […]