ஜவுளி கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது மதுரை வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவர் அந்த பகுதியில் ஜவுளி கடை வைத்துள்ளார். நேற்று மதியம் இவர் கடையில் இருந்தபோது 2 பேர் வந்தனர். அவர்கள் சரவணனிடம் மாமூல் கேட்டனர். அவர் தர மறுத்தார். ஆத்திரமடைந்த 2 பேரும் ஜவுளிக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் கடை மீது கல் வீசி தாக்கினர். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. இதில் தொடர்புடைய […]
Day: February 14, 2023
கொள்ளையர்கள் மதுரை சிறையில் அடைப்பு
கொள்ளையர்கள் மதுரை சிறையில் அடைப்பு ராமேசுவரம் கடல் பகுதியில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நாட்டுப் படகில் தங்கம் கடத்தி வந்த நாகூர் ஹனி (32), முகமது சமீர் (29), முகமது இப்ராஹிம் மகன் சகுபர் சாதிக் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நடுக் கடலில் வீசிய ரூ. 150 கோடி மதிப்புடைய 17.74 கிலோ தங்க […]
அவசரகால பேரிடர் மேலாண்மை ஒத்திகை
அவசரகால பேரிடர் மேலாண்மை ஒத்திகை திருமங்கலம் அருகே பெருமாள்பட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் அவசரகால பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மண்டல செயல்மேலாளர் சிவகுருநாதன் தலைமை வகித்தார். முதுநிலை பராமரிப்பு மேலாளர் கார்த்திக்குமார், செயல்மேலாளர் சுந்தர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார், தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராணி, செக்கானூரணி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர். மதுரை கப்பலூரில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, […]
மதுரை திருமங்கலம் அருகே இரு வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர்கள் உள்பட. மூவர் மரணம்
மதுரை திருமங்கலம் அருகே இரு வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர்கள் உள்பட. மூவர் மரணம் மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்தவர் ஜெயசூர்யா(வயது19). இவர் பெருங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மாலை ஜெயசூர்யா திருமங்கலத்தில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். கப்பலூர் மேம்பாலத்தில் இருந்து வலதுபக்கம் திரும்பியபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசூர்யா தலையில் பலத்த […]
மதுரையில் பெண்கள் மாயம்
மதுரையில் பெண்கள் மாயம் மதுரை மேலஅண்ணாதோப்பு பாண்டித்தெரு காம்பவுண்டை சேர்ந்தவர் சித்ரா. இவரது மகள் பவித்ரா(வயது21). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். பவித்ராவிற்கும், அவரது வீட்டு மாடியில் வசிக்கும் வாலிபர் சரவணகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த இரு குடும்பத்தினர் இருவரையும் கண்டித்தனர். அதன் பிறகு பவித்ராவிற்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி காலை வங்கிக்கு சென்று வருவதாக கூறி சென்ற பவித்ரா அதன் […]
பாலக்கோடு ஸ்தூபி மைதானம் ரவுண்டானா பகுதியில் பேரிகார்டு அமைத்து, ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி,
வாகனபோக்குவரத்தை சீர்படுத்திய பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து.
பாலக்கோடு ஸ்தூபி மைதானம் ரவுண்டானா பகுதியில் பேரிகார்டு அமைத்து, ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி,வாகனபோக்குவரத்தை சீர்படுத்திய பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு – பெல்ரம்பட்டி சாலைஸ் ஸ்தூபிமைதானம் ரவுண்டானா பகுதியில் ஆட்டோ மற்றும் கனரக வாகனங்களால் தினந்தோறும் கடும்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இனங்க அதிரடியாக களத்தில் இறங்கிய பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்கள் ரவுண்டனா பகுதியில் பேரிகார்டு அமைத்து ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டினார்.மேலும் கனரக வாகனங்கள் இவ்வழியாக திரும்ப தடைவிதித்துள்ளார், அப்பகுதியில் சாலையின் […]
பாலக்கோட்டில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
பாலக்கோட்டில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பாலக்கோடு போலீஸ் நிலையம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் தவமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் ஸ்தூபி மைதானம், கடைத்தெரு, பஸ் நிலையம், தாலுகா அலுவலகம், தக்காளி மண்டி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் […]