பஞ்சப்பள்ளி அருகேடிரான்ஸ்பார்மரில் ரூ.80 ஆயிரம் காப்பர் ஒயர், ஆயில் திருட்டு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அருகே கொக்கிகல் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு சென்ற மர்ம நபர்கள் டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் டிரான்ஸ்பார்மரை உடைத்து அதில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர் மற்றும் ஆயிலை திருடி சென்றனர். இதையடுத்து நேற்று காலை […]