பாலக்கோடு சர்க்கரை ஆலையில் வெல்லப்பாகு உடலில் கொட்டியதில் தொழிலாளி சாவு பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 61). இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி முனியம்மாள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த மாதம் 24-ந் தேதி முனுசாமி சர்க்கரை ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது கொதிக்கும் வெல்லப்பாகு கொட்டியது. இதில் அவர் […]
Day: February 3, 2023
பாலக்கோடு அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
பாலக்கோடு அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியும், அதே பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியை தர்மபுரி பஸ் நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு வாலிபர் தலைமறைவானர், தகவலறிந்த […]
CBSE பள்ளி நடத்துவதற்குரிய அரசு விதிமுறைகள்
CBSE பள்ளி நடத்துவதற்குரிய அரசு விதிமுறைகள் Central Board of Secondary Education எனப்படுகின்ற மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரிய அனுமதி பெறாமல், பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., என, விளம்பரம் செய்து மாணவர்களிடம் வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.‘நீட்’ தேர்வுமருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ தேர்வு;மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்; ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., என்ற மத்திய அரசின் இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான வினாக்கள் கேட்கப்படுகின்றன.இதனால், தமிழகத்தில் செயல்படும், பல […]
வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன?
வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கை செய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற சில நடவடிக்கைகளுக்கு பயந்து வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தாமல் விரைந்து செல்லுவதால் சில வேளைகளில் பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் […]
மேலவளவு கொலை வழக்கு: 13 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
மேலவளவு கொலை வழக்கு: 13 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு ஊராட்சியின் தலைவராக இருந்த முருகேசன் உள்பட 7 பேர் 1997-ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 17 பேரில் 5 ஆண்டு சிறைவாசம் அனுபவித்து 60 வயதை கடந்த 3 பேரை அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதில் ஒருவர் இறந்துவிட்டார். […]
மதுரையில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
மதுரையில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் மதுரை பைக்காரா, மின்வாரிய பிரதான சாலை துரைப்பாண்டி காம்பவுண்டை சேர்ந்தவர் லாவண்யா (வயது23). இவரது கணவர் ஆறுமுகம். இவர்களுக்கு ஆதி(4), அர்ஜூன்(3) என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆறுமுகம் இறந்த பிறகு லாவண்யா, 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தொழிலாளி சண்முகபாண்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் குழந்தைகளுடன் பைக்காராவில் வசித்து வந்தனர். கடந்த 24-ந் தேதி லாவண்யா தனது இரு மகன்களுடன் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் […]
பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ்
பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாந்தி சுந்தரி (வயது 56).இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். சாந்திசுந்தரி பல மணி நேரம் கூட்ட நெரிசலில் வரிசையில் காத்திருந்தார். அப்போது சாந்தி சுந்தரி கையில் வைத்திருந்த கைப்பையை மர்ம நபர் திருடி கொண்டு தப்பினார். அதில் 10 பவுன் இருந்தது. […]