போலீஸ் ஸ்பெஷல் ஆபரேஷன்… 20 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சத்துடன் வசமாக சிக்கிய பெண்! தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், நானக்ராம்குடா பகுதியில் கஞ்சா ராணி என அழைக்கப்படும் நீது பாய் என்ற பெண், சைபராபாத் சிறப்பு அதிரடிக் குழுவின் (எஸ்ஓடி) டார்கெட்டில் கைது செய்யப்பட்டார். நேற்று நடந்த இந்த கைது சம்பவத்தில், 20 கிலோ கஞ்சா மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கத்துடன் கையும் களவுமாக நீது பாய் பிடிபட்டார். தெலுங்கானா போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் கச்சிபௌலி […]
Day: March 17, 2024
அம்பானி வீட்டு திருமண விழாவில் திருட ஸ்கெட்ச்… டெல்லியில் சிக்கிய `திருச்சி கேங்’
அம்பானி வீட்டு திருமண விழாவில் திருட ஸ்கெட்ச்… டெல்லியில் சிக்கிய `திருச்சி கேங்’ குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து திருடியது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் ரூபாய் மற்றும் லேப்டாப் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். […]
சிறார் வதைக்கு ஆளான 9 வயது சிறுமி… குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை – வேலூர் நீதிமன்றம்
சிறார் வதைக்கு ஆளான 9 வயது சிறுமி… குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை – வேலூர் நீதிமன்றம் வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சிந்தக் கணவாய் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற சுரேஷ்குமார். கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த 2017-ம் ஆண்டு மே 24-ம் தேதி, விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து, அருகிலுள்ள மாங்காய் தோட்டத்துக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸில் […]
காவல் நிலைய சிசிடிவி பதிவு 18 மாதம் சேமிக்க அரசாணை
காவல் நிலைய சிசிடிவி பதிவு 18 மாதம் சேமிக்க அரசாணை காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள, ‘சிசிடிவி கேமரா’ பதிவுகளை, 18 மாதம் சேமித்து வைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தற்போதும், காவல் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராவில் பதிவாகும் காட்சிகளை, 30 – 40 நாட்கள் மட்டுமே சேமிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதை மாற்றி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 12 முதல் 18 மாதங்கள் வரை சேமித்து வைக்கும் வகையில், உபகரணங்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. […]
மதுரை மத்திய சிறைச்சாலைக்குள் கஞ்சா கரிமேடு போலீசார் விசாரணை
மதுரை மத்திய சிறைச்சாலைக்குள் கஞ்சா கரிமேடு போலீசார் விசாரணை மதுரை மத்திய சிறையில் பி செக்டாரில் விசாரணை கைதி சமயநல்லூர் முத்து இருளனிடமிருந்து 32 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது இவர் இதனை எதன் வழியே எப்படி கொண்டு வந்தார் என கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆந்திராவில் இருந்து உசிலம்பட்டிக்கு சரக்கு வேனில் கடத்திய 40 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது
ஆந்திராவில் இருந்து உசிலம்பட்டிக்கு சரக்கு வேனில் கடத்திய 40 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.இந்தநிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் […]
வெளிநாட்டு பயணி தவற விட்ட கைப்பையை திருடி நகை-பணம் அபேஸ் செய்த கணவன், மனைவி கைது
வெளிநாட்டு பயணி தவற விட்ட கைப்பையை திருடி நகை-பணம் அபேஸ் செய்த கணவன், மனைவி கைது மலேசியாவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 52). இவர் தனது மனைவி வனிதா, மகள் பிரிதிகா. சந்திரன் மகள் பிரிதிகாவின் சிகிச்சைக்காக உறவினர்கள் 3 பேருடன் பாண்டிச்சேரி செல்ல திட்டமிட்டார். இதற்காக நேற்று அதிகாலை அவர்கள் திருச்சி வந்தனர்.காலை 6 மணியளவில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு பின் சமயபுரம் அருகே உள்ள அக்கரைபட்டி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்ய சென்றனர். […]
தாயை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய மகள்
தாயை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய மகள் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள தேங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்காளை. இவர் மதுரை பழங்காநத்தம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது55). பக்கவாத நோயால் அவதிப்பட்டு பரமேஸ்வரி அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேங்கல்பட்டியில் உள்ள அவரது வீட்டில் பரமேஸ்வரி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். அப்போது […]
மதுரை வெள்ளாளபட்டியில் அனுமதியின்று மஞ்சுவிரட்டு ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
மதுரை வெள்ளாளபட்டியில் அனுமதியின்று மஞ்சுவிரட்டு ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு வெள்ளாளபட்டியில் அரசு அனுமதியின்றி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மஞ்சுவிரட்டு நடத்தியதாக மணப்பச்சேரி வி.ஏ.ஓ., செல்வம் புகார் கொடுத்தார் அதன் பேரில் தெய்வேந்திரன் போஸ் குமார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூனா சுவாமி கோயில் தேரோட்டம்
தேன்கனிக்கோட்டை அருகே மல்லிகார்ஜூனா சுவாமி கோயில் தேரோட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மல்லிகார்ஜூன துர்க்கம் கிராமத்தில் உள்ள மல்லிகார்ஜூன சுவாமி கோயிலில் தேர்த்திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள், பூஜை செய்யபட்டு தீபாரதனை காப்பிக்கப்பட்டது. பின்னர் தேரோட்டம் நடந்தது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர் அதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று ஜெல்லிக்கட்டு விழா நடைபெற்றது […]