அறந்தாங்கியில் அரசு பஸ்சை கடத்தி விபத்தை ஏற்படுத்தியவர் கைது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து நாள்தோறும் 67 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் இரவு நேரங்களில் பணிமனையில் இடம் இல்லாத காரணத்தால் சில பேருந்துகள் பணிமனையின் வெளி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அந்த வகையில் அறந்தாங்கியிலிருந்து திருவாடனை செல்லக்கூடிய பேருந்து நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வழக்கம் போல் பணிமனையின் வெளி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த மர்ம நபர் ஒருவர் பேருந்தை இயக்கி […]
Day: March 24, 2024
ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்களை அடித்து விரட்டிய தாய், மகள்
ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்களை அடித்து விரட்டிய தாய், மகள் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் பேகம்பேட் வட்டாரத்தில் தன் பதின்ம வயது மகளுடன் வசிக்கிறார் அமிதா மஹ்னோட் எனும் மாது. சென்ற வியாழக்கிழமை (மார்ச் 21) பிற்பகலில் அவர்களது வீட்டிற்கு அழையா விருந்தாளிகளாக வந்தனர் ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்கள் இருவர். ‘கூரியர்’ அஞ்சல் சேவை வழங்குவோரைப்போல் நடித்து வீட்டிற்குள் நுழைந்த சுஷில் குமார், பிரேம்சந்திரா எனும் இருவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை கூறியது. தலைக்கவசம், முகக்கவசம் போன்றவற்றை […]
விவசாயி கொலை- உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை
விவசாயி கொலை- உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து என்பவரது மகன் துர்க்கை ஈஸ்வரன் (வயது 32). விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் கைக்குழந்தை உள்ளது. இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி வீட்டிலிருந்து போன துர்க்கை ஈஸ்வரன் 17-ந் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனால் அதிக மது போதையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கருதிய குடும்பத்தினர் அவரது உடலை புதைத்து விட்டனர். […]
சரக்கு லாரியில் தனியறை அமைத்து கடத்தப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
சரக்கு லாரியில் தனியறை அமைத்து கடத்தப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகே சூளகிரி காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாரியை ஓட்டி வந்த வாகனத்தின் டிரைவர் போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்த போது, அதில் இரும்பு தகரம் மூலம் தடுப்பு ஏற்படுத்தி தனியறை […]
சேலையூர் சப்-இன்ஸ்பெக்டர் வங்காளதேசத்தில் கைது: போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?
சேலையூர் சப்-இன்ஸ்பெக்டர் வங்காளதேசத்தில் கைது: போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா? சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜான் செல்வராஜ். இவரது சொந்த ஊர் திருச்சி ஆகும். சென்னை மடிப்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த அவர் அங்கிருந்தபடி சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு பணிக்கு சென்று வந்தார். இவர் போலீஸ் நிலையத்தில் இருந்து கோர்ட்டுகளுக்கு குற்றவாளிகளை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் இவர் அடிக்கடி மருத்துவ விடுப்பில் […]
தெலுங்கானா ரசாயன தொழிற்சாலையில் ரூ.பல கோடி போதை பொருள் தயாரிப்பு
தெலுங்கானா ரசாயன தொழிற்சாலையில் ரூ.பல கோடி போதை பொருள் தயாரிப்பு தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பொல்லாரம் என்ற இடத்தில் தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வருவதாக தெலுங்கானா மதுவிலக்கு மற்றும் காலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கலால் மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகள் ரசாயன தொழிற்சாலைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். தொழிற்சாலையில் ஆச்சரிய குறியீடுகளுடன் பல மூட்டைகள் இருந்தன. இதனால் […]
தோட்டத்துக்குள் புகுந்து 3 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தையால் பரபரப்பு
தோட்டத்துக்குள் புகுந்து 3 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தையால் பரபரப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவதுயும் தொடர் […]
தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழப்பு – தனியார் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!
தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழப்பு – தனியார் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்! தருமபுரியில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் நர்சிங் கல்லூரி உயிரிழந்ததால் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். தருமபுரி மாவட்டம் சோளக்கட்டையை அடுத்த லாழாய்க்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரின் மகள் காயத்ரி தருமபுரி அடுத்த நல்லம்பள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் […]
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6 கிலோ தங்கம் பறிமுதல் – பறக்கும் படை அதிரடி!
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6 கிலோ தங்கம் பறிமுதல் – பறக்கும் படை அதிரடி! ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 6.3 கிலோ தங்க நகைகள் மற்றும் 2.7 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஶ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில் டி.மானகசேரி விலக்கு பகுதியில் தனி வட்டாட்சியர் ரெங்கசாமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிவகாசியில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற கூரியர் நிறுவன வாகனத்தை சோதனை செய்த போது […]