பைக் டாக்ஸியில் சென்ற இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – இளைஞர் கைது! சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் வசித்து வருபவர் கீதா (33) (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). இவர் கடந்த 19.3.2024-ம் தேதி இரவு பைக் கால் டாக்ஸி மூலம் கிண்டியிலிருந்து கொட்டிவாக்கத்துக்குச் செல்ல முன்பதிவு செய்தனர். அப்போது பைக்கை நடனசபாபதி என்பவர் (22) ஓட்டினார். கொட்டிவாக்கத்தில் கீதாவை இறக்கிவிட்ட பிறகு வாடகை பைக்குக்கான கட்டணத்தை அவர் நடனசபாபதியிடம் கொடுத்தார். அப்போது திடீரென நடனசபாபதி, கீதாவுக்கு பாலியல் […]
Day: March 23, 2024
சென்னையில் ஐ.பி.எல். போட்டி டிக்கெட்: கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது
சென்னையில் ஐ.பி.எல். போட்டி டிக்கெட்: கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது சென்னை திருவல்லிக்கேணியில் ஐ.பி.எல். போட்டி டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு அணிகள் இடையிலான ஐ.பி.எல். போட்டி டிக்கெட்டுகளை அதிக விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த வினோத்குமார்(36), அசோக்குமார் (21), இம்மானுவேல்(30), ரூபன்ரமேஷ் (26) விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றம்பரமத்திவேலூர் அருகே வாகன சோதனையில் ரூ. 6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கம் பறிமுதல்!!
குற்றம்பரமத்திவேலூர் அருகே வாகன சோதனையில் ரூ. 6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கம் பறிமுதல்!! நாமக்கல் : பரமத்திவேலூர் அருகே மாணிக்கம் பாளையத்தில் வாகன சோதனையில் ரூ.6.2 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நித்திரவிளை அருகே மர்மமாக இறந்த இளம்பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் அம்பலம்
நித்திரவிளை அருகே மர்மமாக இறந்த இளம்பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது பிரேத பரிசோதனையில் அம்பலம் கணவன் தலைமறைவுநித்திரவிளை : நித்திரவிளை அருகே இளம்பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் குரல்வளை நொறுங்கியதால் கொடூரமாக உயிரிழந்திருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் கடைசி நிமிடத்தில் சித்ரவதையை அனுபவித்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. நித்திரவிளை அருகே பூத்துறை கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் சஜின் (37). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி ஷானிகா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி […]
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்புதேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்.இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் பெரியகுளம் உட்கோட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.விவேகானந்தன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் மத்தியபாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதுரை மாநகர் மத்திய போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு. அருண்குமார்அவர்கள் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர் J. லோகநாதன் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். அவர்களுக்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்
திருச்சி நெடுஞ்சாலை.. 2 கிமீக்கு ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்! பரனூர் டோலில் அடிதடி
திருச்சி நெடுஞ்சாலை.. 2 கிமீக்கு ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்! பரனூர் டோலில் அடிதடி செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட அடிதடியால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டை அடுத்த பரனூரில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியை கடந்து தினமும் பல லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் தான் இன்று சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த பாலு என்பவர் இன்று மாலை வாகனத்தில் […]
புகை மண்டலமான தென்காசி.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. சிதறிய கட்டிடங்கள்
புகை மண்டலமான தென்காசி.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. சிதறிய கட்டிடங்கள் தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஆலையில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் மைப்பாறை பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மக்காச்சோளம் […]
கருங்கல் பகுதியில் தொடர் பைக் திருட்டு ஒரே கும்பல் கைவரிசை காட்டுவது அம்பலம்
கருங்கல் பகுதியில் தொடர் பைக் திருட்டு ஒரே கும்பல் கைவரிசை காட்டுவது அம்பலம் குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் ஜோசப் கெவின். மீன்பிடி தொழிலாளி. அவரது மனைவியின் சகோதரர் ராமன்துறையை சேர்ந்த அஜீஸ் (26). 2 பேரும் பாண்டிச்சேரியில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தற்போது கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியில் ஒரு அப்பார்ட்மென்டில் வீடு வாடகைக்கு எடுத்து ஜோசப் கெவின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அஜிஸின் பைக்கை பயன்படுத்தி வந்தார். கடந்த […]
ஏற்காட்டில் பரபரப்பு போலி சான்றிதழ் கொடுத்து 27 ஆண்டாக பணிபுரிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்
ஏற்காட்டில் பரபரப்பு போலி சான்றிதழ் கொடுத்து 27 ஆண்டாக பணிபுரிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஏற்காடு மலை கிராமத்தில் போலி சான்றிழ்கள் கொடுத்து, 27 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர், உண்மை கண்டறியும் சோதனையில் சிக்கினார். இது குறித்து வட்டார கல்வி அலுவலர் கொடுத்த புகாரின், போலீசார் வழக்குபதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முளுவி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய […]