மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீத்தடுப்பு நிகழ்ச்சி ஒத்திகை மூச்சுத் திணறலுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? செயல்முறை விளக்கம் செய்து காட்டிய தீயணைப்பு துறையினர் உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா அடுத்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது இதையொட்டி பட்டாபிஷேகம் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அறிவுறுத்தலின்படி தீ விபத்து […]
Day: March 29, 2024
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு கைது செய்தது. சென்னை புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (மார்ச்28) முடிவடைகிறது. இந்நிலையில் சிறையில் இருந்து காணொலி மூலம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிவில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் […]
மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை
மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை விழுப்புரம்: மேல்மலையனூர் அடுத்த அவலூர்பேட்டையில் எரும்பூண்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (33) அடித்துக்கொலை செய்யப்பட்டார். சுரேஷை அடித்துக் கொன்று மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு சென்றவர்களை அவலூர்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு வாரத்தில் பாலியல் தொழில் நடத்திய பிரபல புரோக்கர் கைது: லாட்ஜ் மேலாளரும் சிக்கினார்.
குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு வாரத்தில் பாலியல் தொழில் நடத்திய பிரபல புரோக்கர் கைது: லாட்ஜ் மேலாளரும் சிக்கினார். குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு வாரத்தில், இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய பிரபல பாலியல் புரோக்கர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேப்பாக்கம் மியான் சாகிப் 1வது தெருவில் உள்ள லாட்ஜிக்கு வரும் வாடிக்கையார்களிடம், இளம்பெண்களின் புகைப்படங்களை காட்டி, பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் […]
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது: துபாய்க்கு தப்பிச்செல்ல முயன்றபோது சிக்கினார்.
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது: துபாய்க்கு தப்பிச்செல்ல முயன்றபோது சிக்கினார். வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த கடலூரை சேர்ந்த தலைமறைவு குற்றவாளி, துபாய் நாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்றபோது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (34). இவர் மீது, வரதட்சணை கொடுமை, மிரட்டுதல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ளன. அவரை, […]
அரும்பாக்கம் பகுதியில் குட்கா பதுக்கிய வீட்டிற்கு சீல்: வடமாநில வாலிபர் உள்பட இருவர் கைது, வீட்டு உரிமையாளருக்கு ரூ.25000 அபராதம்
அரும்பாக்கம் பகுதியில் குட்கா பதுக்கிய வீட்டிற்கு சீல்: வடமாநில வாலிபர் உள்பட இருவர் கைது, வீட்டு உரிமையாளருக்கு ரூ.25000 அபராதம் அரும்பாக்கத்தில் குட்கா பதுக்கிய வீட்டிற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், வீட்டின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்தபடி, பெட்டிக் கடைகளுக்கு குட்கா விற்பனை செய்து வந்த வடபழனியை சேர்ந்த பன்னீர் (45) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 53). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார், இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாகை முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த […]
அத்திமாஞ்சேரிப்பேட்டையில் தொடரும் பைக் திருட்டு: பொதுமக்கள் அச்சம்
அத்திமாஞ்சேரிப்பேட்டையில் தொடரும் பைக் திருட்டு: பொதுமக்கள் அச்சம் பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிப்பேட்டை கிராமத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பள்ளிப்பட்டு – சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அத்திமாஞ்சேரிப்பேட்டை, பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியாக உள்ளது. அத்திமாஞ்சேரிப்பேட்டை கிராமத்தில், பாதுகாப்பு உறுதிப்படுத்து வகையில் ஊராட்சி மன்றம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அத்திமாஞ்சேரிப்பேட்டை கிராமம் […]
சென்னை கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்து – நடந்தது என்ன?
சென்னை கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விபத்து – நடந்தது என்ன? சென்னை – ஆழ்வார்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த செக்மேட் பார் என்ற கேளிக்கை விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை வியாழக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கேளிக்கை விடுதிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல். விபத்து நடந்தது எப்படி? – “வியாழக்கிழமை மாலை 7.15 மணி அளவில் அவசர அழைப்பு […]
ஆந்திரா அரசு பேருந்தில் கடத்தி வந்த 9 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திரா அரசு பேருந்தில் கடத்தி வந்த 9 கிலோ கஞ்சா பறிமுதல் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நேற்று அதிகாலை ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை மாதவரத்திற்கு செல்லும் அரசு பேருந்தில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, பேருந்தில் இருந்த 2 பயணிகள் வைத்திருந்த பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. பின்னர், பறிமுதல் செய்யப்பட்டது. […]