கம்போடியா நாட்டில் உருவாகும் சைபர் க்ரைம் குற்றவாளிகள்” – ஏடிஜிபி சஞ்சய் குமார் தகவல் பூவிருந்தவல்லி அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், சைபர் க்ரைம் குற்றச் செயல்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சைபர் க்ரைம் தலைமையகம் சார்பில் நடைபெற்றது. இதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தற்கால சைபர் மோசடி குறித்து தமிழ்நாடு சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பேசிய அவர் மக்கள் தொகை […]
Day: May 29, 2024
புதிய சட்டங்கள் குறித்து ஆலோசனை பயிற்சி
புதிய சட்டங்கள் குறித்து ஆலோசனை பயிற்சி புதிய குற்றவியல் சட்டங்களான 1. பாரதிய நீதிச் சட்டம் Bharatiya Nyaya Sanhita(BNS)2023 2. பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் Bharatiya Nagarik Suraksha Sanhita(BNSS)2023 3. பாரதிய சாட்சிய சட்டம் Bharatiya Sakshya Adhiniyam(BSA)2023 ஆகிய சட்டங்கள் (01.07.2024)அன்று நடைமுறைக்கு வருவதை முன்னிட்டு இன்று இச்சட்டங்கள் குறித்த பயிற்சியானது மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் IPS., அவர்கள் தலைமையில் மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு […]
திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை சார்பில் காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி
திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை சார்பில் காவலர்களுக்கு முதலுதவி பயிற்சி 27.05.2023 திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப். இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் படி திண்டுக்கல் நகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சிபின். இ.கா.ப., அவர்களின் முன்னிலையில் காவல்துறையினருக்கு திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனை சார்பில் Emergency Day முதலுதவி சிகிச்சை முறை பயிற்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கலவரத்தை கலைப்பது குறித்து ஒத்திகை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கலவரத்தை கலைப்பது குறித்து ஒத்திகை இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் முன்னிலையில், ஆயுதப்படை காவலர்கள் கலவரக்கூட்டத்தை கலைப்பதற்கான களப்பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயில் மற்றும் மழையில் பாதுகாப்பாக பணிபுரிய புதிய குடை அறிமுகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயில் மற்றும் மழையில் பாதுகாப்பாக பணிபுரிய புதிய குடை அறிமுகம் வெயில் மற்றும் மழையில் கடுமையாக பணிபுரியும் காவலர்களுக்கு உதவும் விதமாக 13 நபர்கள் நிற்க்கக்கூடிய அளவிலான 75 அதிநவீன குடையை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் காவலர்களுக்கு வழங்கினார்கள்..
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் பார்வையிட்ட காவல் ஆணையர்
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் பார்வையிட்ட காவல் ஆணையர் வருகின்ற(04.06.2024) அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மதுரையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள், மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஆய்வு செய்தனர். மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் உடன் இருந்தனர்.