மதுரை, செல்லூர் பகுதியில் தங்கநகை திருட்டு, செல்லூர் போலீசார் தீவிர விசாரணை
மதுரை மாநகர் செல்லூர் D2, குற்றப்பிரிவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான செல்லூர் ஜீவா ரோடு, வள்ளுவர் தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் திருமதி. கவிதா, இவர் கணவர் வடிவேல்ராஜா, மற்றும் இவரது மகன் ஜெயசூர்யா ஆகியோருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகின்றனர். இவர் பீபீகுளத்தில் உள்ள தீன் பிரியாணிக் கடையில் வேலை பார்த்து வருகிறார், இவரது கணவர் மதுரை, கீழமாசி வீதியில் உள்ள பகவதி பலசரக்கு கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார், வழக்கமாக இவர் காலையில் 7.30 மணிக்கும், இவரது கணவர் காலை 7.45 மணிக்கும் வேலைக்கு செல்வர். சம்பவ நாளான கடந்த 21 ம் தேதி வழக்கம் போல் கணவர் காலை 7.45 மணிக்கு தன் மகனை தனது மாமியார் வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன்பின் இவரது மனைவி தன் வேலை முடித்து மதியம் 12.30 மணியளவில் தன் வீடு வரும் போது வீட்டு கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்டவுடன் அதிர்ச்சியடைந்தார் அதன் பின் வீட்டிலுள் சென்று பார்த்த போது தான் பீரோவில் வைத்திருந்த தங்க நெக்லஸ் தங்க செயின், மோதிரம் தாயத்து என மொத்ம் 10 பவுனுக்கு மேல் கானவில்லை என அறிந்தார், உடனே தன் கணவருக்கு தகவல் அளித்து அவரும் வந்து பார்த்து அதன் பிறகு செல்லூர் D2, குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் களவு போன தங்களுடைய 10 தே கால் பவுன் தங்க நகையை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர், புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி வேதவள்ளி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், இது பற்றி ஆய்வாளர் அவர்களிடம் கேட்டபோது குற்றவாளியை நெருங்கி விட்டதாகவும் விரைவில் பிடித்து விடுவோம் எனவும் கூறினர்.
