Police Department News

சேலத்தில் பிரபல கொள்ளையன் மர்மான முறையில் கைது காவல்துறையினர் விசாரணை

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசஞ்சாவடி பக்கமுள்ள மைக்ரோ ஸ்டேசன் பஸ்நிறுத்தம் அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையை ஒட்டியுள்ள சேலம் – விருத்தாசலம் ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு வாலிபர் பிணம் கிடப்பதாக வாழப்பாடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்திஇ வாழப்பாடி ஆய்வாளர் உமாசங்கர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரெயில் தண்டவாளத்தில் உடல் கிடந்ததால் சேலம் சூரமங்கலம் ரெயில்வே […]

Police Department News

மதுரையில் இந்திய குடியரசு தலைவர் அவர்களை காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் அவர்கள் வரவேற்றார்

மதுரை: மதுரையில் கடந்த (23.12.2017) அன்று மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த மாண்புமிகு. இந்திய குடியரசு தலைவர் அவர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS., அவர்கள் வரவேற்றார்.

Police Department News

திருப்பூரில் கோவிலுக்குள் புகுந்து நகைகள் கொள்ளை காவல்துறையினர் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் அருகே நேருநகரில் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (35) என்பவர் இருந்து வருகிறார். தற்போது மார்கழி மாதம் என்பதால் கோவில் நடை தினமும் அதிகாலையில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலில் பூஜை முடிந்ததும் வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு ராம்குமார் தனது வீட்டுக்கு சென்று விட்டார். மார்கழி மாத பூஜைக்கு அதிகாலையிலேயே பக்தர்கள் […]

Police Department News

ராமநாதபுரத்தில் மணல் கடத்தல் வாகனங்கள் பறிமுதல்

ராமநாதபுரம்: 5.12.2017 மற்றும் 26.12.2017 தேதிகளில், இராமநாதபுரம் மாவட்டத்தில் அபிராமம் மற்றும் எஸ்.பி. பட்டணம் ஆகிய இடங்களில் எவ்வித அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் திருடிய 1) பாண்டி (35) 2) டேவிட் (23) 3) லியோ (19) அறிவித்தி ஆகியோரையும் மற்றும் அவர்கள் மணல் அள்ள பயன்படுத்திய ஒரு மணல் அள்ளும் இயந்திரம் (without Reg. No) ஒரு டிப்பர் லாரி (Reg. No: TN 19 D 8752) மற்றும் ஐந்து ட்ராக்டர்களும் […]

Police Department News

இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை தேர்வு

தமிழகக் காவல்துறை பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைவதற்காகவும், தடுப்பதற்காகவும் எண்ணற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பயனாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியப் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதன்மை பெருநகரமாக சென்னையை அறிவித்துள்ளது பெருமைக்குரிய நிகழ்வாகும்

Police Department News

ஜெ.தீபா வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 3 ஆட்டோக்களில் சில மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள், தீபா பேரவை அலுவலகம் மற்றும் வீடு மீது கற்களை வீசினர். இதைப் பார்த்த அங்கிருந்த காவலாளிகள் ஆட்டோவை நோக்கி ஓடி வந்தனர். உடனே ஆட்டோவில் வந்த நபர்கள், ஆட்டோவிலேயே தப்பிச் சென்றனர். இது குறித்து தீபா பேரவை சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Police Department News

ரூ.20 டோக்கன் விவகாரம்: கொருக்குப்பேட்டையில் நடந்த மோதலில் 4 பேர் கைது

ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்களை கொடுத்து தேர்தல் முடிந்த பிறகு, 20 ரூபாய் டோக்கன்களை திரும்ப பெற்று ரூ.10 ஆயிரம் வரை கொடுக்க திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் வசிக்கும் ஜான்பீட்டரிடம் (35) சென்று, தங்களுக்கு 20 ரூபாய் […]

National Police News Police Department News

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க மாநகராட்சி பள்ளி மாணவி தேர்வு

இந்திய குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்து கொள்ள சென்னைப் பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தலைமையில் ஜன.26 அன்று புதுடில்லியில் நடைபெறுகின்ற 69-வது குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் பங்கேற்க சைதாப்பேட்டையில் உள்ள சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி டி.ராமலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழா உலக அளவில் பிரசித்தி பெற்றது. குடியரசு தினமான ஜன.26 அன்று […]