அரியலூர்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த காவேட்டேரி கிராமத்தில் உள்ள நரிக்குறவர் தெருவை சேர்ந்தவர் ராமராஜன்(26). இவருடைய மனைவி மீனா(20). இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்த மீனாவுக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த குழந்தை, கோவை மாவட்டம் ஜோதிபுரத்தை சேர்ந்த செல்வராஜ்(40) என்பவருக்கு தத்து கொடுத்தாக கூறி விற்கப்பட்டுள்ளதாக, அரியலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் யூனிஸ்கான், […]
Month: December 2017
காஞ்சீபுரத்தில் ரவுடிகளை கொலை செய்ய சதித் திட்டம் வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்குளடன் கைது
காஞ்சீபுரம்: காஞ்சீபுரத்தில் உள்ள ரவுடிகளை பணம் கேட்டு மிரட்டி, நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்படுவதாக சின்ன காஞ்சீபுரம் காவல் ஆய்வாளர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், காவல் படையுடன் காஞ்சீபுரம் பி.எஸ்.கே. தெருவுக்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு ரவுடிகளை பணம் கேட்டு மிரட்டி, நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டிக்கொண்டிருந்ததாக காஞ்சீபுரத்தை சேர்ந்த ரவுடிகளான ஹைதர்பேட்டை தெருவைச் சேர்ந்த மார்க்கெட் விக்கி என்ற […]
முதல்வர் பழனிசாமி சட்டைப் பையில் மோடி படம் இருப்பதுபோல் மார்பிங் செய்து வெளியிட்ட இளைஞர் கைது
தமிழக முதல்வர் பழனிசாமியின் சட்டைப் பையில் மோடி படம் இருப்பதுபோல் மார்பிங் செய்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டதாக மதுரையை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். ஒக்கி புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வந்தார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது முதல்வர் பழனிசாமியின் சட்டைப் பையில் பிரதமர் மோடியின் படம் இருப்பது போன்ற படம் வாட்ஸ்அப்பில் […]
புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட 5 எம்எல்ஏக்கள் கைது
ஒக்கி’ புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் செய்த திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் உட்பட 385 பேர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி ‘ஒக்கி’ புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றபோதும், பாதிக்கப்பட்ட இடங்களில் இன்னும் இயல்புநிலை முழுமையாக திரும்பவில்லை. புயல் சேதத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி, தேசிய பேரிடராக […]
கோவையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி- பட்டறை உரிமையாளர் கைது நகை பட்டறை கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம்:
கோவையில் தங்க நகை பட்டறையின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் பாதர் ராண்டி தெருவில் ரவிசங்கர் (50) என்பவர் தங்க நகைகள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். நான்கு மாடி கொண்ட கட்டிடத்தின் முதல் தளத்தில் நகை பட்டறையும், 2-வது தளத்தில் அலுவலகம், 3-வது தளத்தில் பட்டறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கும் பகுதியும் உள்ளன. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரி கின்றனர். நகைகளை தயாரிக்கும்போது தங்கத்தை […]
இந்திய விமானப்படையில் குரூப்-எக்ஸ், குரூப்-ஒய் டிரேடு பதவிகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
இந்திய விமானப்படையில் குரூப்-எக்ஸ், குரூப்-ஒய் டிரேடு பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய விமானப்படையில் ஏர்மேன் பதவி குரூப்-எக்ஸ் (தொழில்நுட்பம்) குரூப்-ஒய் (தொழில்நுட்பம் அல்லாத) டிரேடு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குருப்-எக்ஸ் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளில் தலா 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியி யல் பாடப்பிரிவில் 3 ஆண்டு கள் பட்டயப் பட்டிப்பில் தேர்ச்சி […]
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: சென்னை காவல் ஆணையர் நேரில் ஆய்வு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார். (அடுத்த படம்) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீலிடப்பட்ட அறைக்கு வெளியே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படை போலீஸார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார். (அடுத்த படம்) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீலிடப்பட்ட அறைக்கு வெளியே பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படை போலீஸார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட […]
வாகனச் சோதனையில் பிடித்த காவலருக்கு அறைவிட்ட இளைஞர் கைது
ஜாபர்கான் பேட்டையில் பட்டப்பகலில் வாகனச் சோதனையில் மடக்கிய போலீஸை பளார் என்று அறைவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை கிண்டி அடுத்த ஜாபர்கான்பேட்டை பாரி நகரில் இன்று காலை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். வேகமாக வந்த அவர்களை குமரன் நகர் போலீஸ் மகேஸ்வரன் பிள்ளை என்பவர் தடுத்தார். அவரை தட்டிவிட்டுச் சென்றவர்களை மகேஷ்வரன் மடக்கிப் பிடித்தார். வண்டியின் சாவியை எடுத்தார், இதைப் பார்த்து ஆத்திரமடைந்த இருசக்கர […]
Man Arrested By Police With 1.7 Kg Of Ganja
The RMC Yard police have arrested a 20-year-old youth from Nepal and recovered 1.7 kg of marijuana from him. Based on a tip-off, a team intercepted Vikas and found a plastic bag containing the drug. Vikas claimed to have purchased the marijuana from labourers of a cement godown in the industrial area on Tumakuru Road. […]
காவல் நிலையத்தில் அரிவாளுடன் புகுந்த மனநோயாளி பிடிக்க முயன்றபோது உதவி-ஆய்வாளருக்கு வெட்டு
கரூர்: கரூர் மாவட்டம் பால விடுதி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அபிமன்யூ(56). இவர் அருகில் உள்ள சிந்தாமணிபட்டி காவல் நிலையத்திலும் சிறப்பு உதவி-ஆய்வாளராக கூடுதலாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் ஏட்டு விஜய்குமார் பணியில் இருந்தார். அப்போது 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்தார். அந்த வாலிபரிடம் ஏட்டு, “ஏன் அரிவாளுடன் வந்திருக்கிறாய்?” என கேட்டார். […]