இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல் ராமேஸ்வரம் : படகில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை இலங்கை நீர்கொழும்பு பகுதியில் கடற்படையினர் கைப்பற்றினர். இலங்கை மேற்கு பிராந்திய கடல் பகுதியில் நேற்று முன்தினம் அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை நீர்கொழும்பு கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த படகின் அருகில் சென்ற கடற்படையினர் படகு முழுவதும் சோதனை செய்தனர். இதில் படகின் […]
Month: March 2024
கன்னியாகுமரி அருகே ஆபாசமாக திட்டியதால் கீழே தள்ளி கொன்றோம்
கன்னியாகுமரி அருகே ஆபாசமாக திட்டியதால் கீழே தள்ளி கொன்றோம் கன்னியாகுமரி அருகே வாலிபர் கொலையில் கைதான நண்பர்கள் 2 பேரும், நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே உள்ள இலந்தையடிவிளை பகுதியை சேர்ந்தவர் தனேஷ் (28). கூலித் தொழிலாளி. கடந்த 24ம் தேதி இரவு தனது நண்பர்கள் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ரகுபாலன் (24), புவியூர் பகுதியைச் சேர்ந்த திவாகர் (29) ஆகியோருடன் இணைந்து மது அருந்திக்கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் ரகுபாலனுக்கும், தனேசுக்கும் […]
புதுவையில் பரபரப்பு சிறுமியை கொன்று வீசிய வாய்க்காலில் வாலிபர் சடலம்
புதுவையில் பரபரப்பு சிறுமியை கொன்று வீசிய வாய்க்காலில் வாலிபர் சடலம் புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் 5ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார். சிறுமியை பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சோலைநகர் அம்பேத்கர் வீதி- கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் […]
மயிலாடுதுறை அருகே பாத்ரூமில் பதுக்கி வைத்திருந்த 2,350 மது பாட்டில் பறிமுதல்
மயிலாடுதுறை அருகே பாத்ரூமில் பதுக்கி வைத்திருந்த 2,350 மது பாட்டில் பறிமுதல் மயிலாடுதுறை அருகே பாத்ரூமில் பதுக்கி வைத்திருந்த 2,350 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆளக்குடி நரியன் தெருவில் வசிப்பவர் அறிவழகன் மனைவி குமுதவல்லி (36). இவரது வீட்டில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மயிலாடுதுறை எஸ்பி மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்பி உத்தரவின்படி எஸ்பி தனிப்பிரிவு போலீஸ் மற்றும் […]
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்து 2 வாலிபர்களை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். ஜார்கண்ட் மாநிலம் அட்டியாவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் அட்டியா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காட்பாடியை கடந்து வந்து கொண்டிருந்தது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் […]
திண்டிவனம் அருகே ஏரியில் கொலை செய்து எரிக்கப்பட்டவரின் கிராபிக்ஸ் புகைப்படம் வெளியீடு
திண்டிவனம் அருகே ஏரியில் கொலை செய்து எரிக்கப்பட்டவரின் கிராபிக்ஸ் புகைப்படம் வெளியீடு திண்டிவனம் அடுத்த ஓங்கூர் அருகே திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் உள்ள பாதிரி, மதுரா ஊராட்சிக்குட்பட்ட கரிக்கம்பட்டி ஏரிக்கரையில் சம்பவத்தன்று கழுத்து அறுக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் சுமார் 45 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. இதனை அவ்வழியாக மாடு மேய்க்க சென்ற சிலர் பார்த்துவிட்டு ஒலக்கூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற எஸ்.பி. தீபக் […]
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் குட்காவுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 86 பேர் கைது!!
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் குட்காவுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 86 பேர் கைது!! சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் குட்காவுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 72 வழக்குகள் பதிவான நிலையில், 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 278 கிலோ புகையிலை பொருட்கள், 162 கிலோ மாவா, 8,250 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள், ரூ.96,000 ரொக்கம், 2 செல்போன்க,ள் 4 இருசக்கர வாகனங்கள், ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளது காவல்துறை.
இறுதி ஊர்வலங்களில் சாலையில் மலர்களை வீச தடை விதித்து டிஜிபி சுற்றறிக்கை
இறுதி ஊர்வலங்களில் சாலையில் மலர்களை வீச தடை விதித்து டிஜிபி சுற்றறிக்கை இறந்த நபர்களின் இறுதி ஊர்வலத்தின் போது சில கட்டுப்பாடுகளை விதித்து டிஜிபி சங்கர் ஜிவால் போலீசாருக்கு கடந்த 20 ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது இறுதி ஊர்வலம் என்பது மக்களின் கலாச்சாரம், உணர்வு பூர்வமான விவகாரம், அதே நேரம், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது இந்த விவகாரத்தில் அந்தந்த போலீஸ் நிலைய காவல் ஆய்வாளர்கள் கீழே குறிப்பிட்டு இருக்கும் […]
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு27.03.2024தேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவபிரசாத்.இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் போடி உட்கோட்டம் சின்னமனூர் பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெரியசாமி அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மற்றும் மத்தியபாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்புதேனி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆர்.வி.ஷஜுவனா,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.விவேகானந்தன் அவர்கள் தலைமையில் பெரியகுளம் உட்கோட்டம் ஜெயமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளபுரம் […]