காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படை முகாமை தகர்க்க, தீவிரவாதிகள் இன்று (திங்கள்) நடத்திய தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடந்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் சுஞ்சுவான் பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள், அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 2 அதிகாரிகள் பலியாயினர். 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து […]
Day: February 12, 2018
வழிப்பறி செய்ய பட்டாக்கத்தியுடன் திரிந்த சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது: 14 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம்பறிமுதல்
பல்லாவரம் பகுதியில் வழிப்பறி செய்துவிட்டு கத்தியுடன் சுற்றி திரிந்த 2 சிறுவர்கள் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பல்லாவரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 4 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தபோது அவர்களிடம் ஒரே இரவில் வழிப்பறி செய்த 14 செல்போன்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். பிடிபட்டவர்களில் 2 பேர் இளம் சிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை. இது பல்லாவரத்தில் மட்டுமல்ல சென்னையில் […]