மது அருந்திவிட்டு தினமும் தம்மை அடித்து துன்புறுத்தும் குடிகார அப்பா தனக்கு வேண்டாம் என தெலங்கானா மாநிலத்தில் 11 வயது சிறுவன், காவல் நிலையத்தில் கதறி அழுத சம்பவம் போலீஸாரை நெகிழச் செய்தது. தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மாத்கால கூடம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். கூலித் தொழிலாளியான இவருக்கு, ரம்யா என்ற மனைவியும், சசிகுமார் (11) என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சசிகுமார், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு […]
Day: February 26, 2018
ஆசிட் வீசப்பட்டு எரிக்கப்பட்ட மடிப்பாக்கம் யமுனா சிகிச்சை பலனின்றி மரணம்: ரத்த பரிசோதனை மைய உரிமையாளர் கைது
மடிப்பாக்கத்தில் செவிலியராக பணியாற்றிய யமுனா என்பவரை ரத்தப் பரிசோதனை மைய உரிமையாளர் ஆசிட் ஊற்றி எரித்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் ஸ்ரீ பாலாஜி ரத்தப் பரிசோதனை மையம் என்ற தனியார் ரத்தப் பரிசோதனை நிலையம் உள்ளது. இதன் உரிமையாளர் ராஜா (40), இவரது ரத்தப் பரிசோதனை மையத்தில் யமுனா (33) செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 19 பிப்ரவரி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் […]
துணை முதல்வரின் சகோதரர் பெயரைக்கூறி திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.1 கோடி பறிக்க முயன்ற 5 பேர் கைது
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள வி.என்.நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (36). இவர் திருச்சி, மதுரை, உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 21-ம் தேதி திருச்சியில் உள்ள இவரது அலுவலகத்துக்கு வந்த சிலர், தங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவின் ஆட்கள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். பின்னர், அம்மா ஸ்கூட்டர் மானியம் திட்ட தொடக்க விழா செலவுக்காக பணம் தேவைப்படுவதாகக் கூறி கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து ஒன்றரை லட்ச […]