Police Department News

காஞ்சிபுரம், முதியோருக்கான கருணை இல்லத்தில் மத்திய உளவுப் பிரிவு ஐ.ஜி பத்மநாபன் தலைமையில் 5பேர் கருணை இல்லத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசப் ஆதரவற்றோருக்கான கருணை இல்லத்தில் இறக்கும் முதியோரைக் கல்லறையில் அடைத்து வைத்து, அதில் எஞ்சும் எலும்புகள் விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளன. இது குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் நிலையில் இன்று கருணை இல்லத்தின் நிர்வாகியான பாதிரியார் தாமசிடமும், அங்குள்ள முதியோர்களிடமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினர். […]

Police Department News

நெல்லை அருகே 45 வயது மதிக்கத்தக்கவர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை

நெல்லை அருகே 45 வயது மதிக்கத்தக்கவரை பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். உடையார்பட்டி வடக்கு புறவழிசாலை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவரின் கையில் முருகன் என பச்சை குத்தி இருந்தது. நேற்று இரவு கும்பலாக வந்து […]

Police Department News

ரவுடி பினுவின் முக்கிய கூட்டாளிகள் போலீசாரிடம் சரண்

சென்னையில் இன்று ஒரேநாளில் 5 ரவுடிகள் சரணடைந்துள்ளனர். ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டபோது கைப்பற்றப்பட்ட 88 செல்ஃபோன் எண்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் ரவுடிகளின் ரகசிய இருப்பிடங்கள், தொடர்புகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் ரவுடிகளை கைது செய்ய போலீசார் நெருங்கத் தொடங்கிய நிலையில் ரவுடி பினு, அவனது எதிர்த் தரப்பு ரவுடியான அரும்பாக்கம் ராதா மட்டுமன்றி இரு தரப்பு ரவுடிகள் பலரும் சரணடைந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இன்றுமட்டும் […]

Police Department News

கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் பணியிட மாற்றம் : DGP உத்தரவு

ஆய்வாளர் பெரியபாண்டியன் மீதான துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தொடர்புடைய கொளத்தூர் ஆய்வாளர் முனி சேகரை பணியிடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையின் போது ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். அப்போது கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர்தான் தவறுதலாக பெரியபாண்டியனை சுட்டது தெரியவந்தது. இது தொடர்பாக முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்கு உள்ளது. இதனிடையே சில நாட்கள் விடுப்புக்குப் பின் முனிசேகர் கொளத்தூர் ஆய்வாளராகவே பணியில் தொடர்ந்து வந்தார். இந்நிலையில் கொளத்தூர் ஆய்வாளராக இருந்த […]

Police Department News

திருமணமான முன்னாள் காதலியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

திருமணமான முன்னாள் காதலியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஆந்திரமாநிலம் சித்தூரில் கைது செய்யப்பட்டார். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரி படிக்கும் போது கிரிம்ஸ்பேட் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞரை காதலித்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த பெண்ணுக்கு சித்தூரைச் சேர்ந்த பவன்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர் காதலிக்கும் போது தன்னுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து மிரட்டிய பிரகாஷ் அந்த பெண்ணை, பலாத்காரம் செய்ததாக […]

Police Department News

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையின் முக்கிய அதிகாரிகள் மாற்றம்

தமிழகம் முழுதும் சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற காவல் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதில் சென்னையின் தெற்கு மண்டல இணை ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல இணை ஆணையர் மனோகரன் உள்ளிட்டோர் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்த விவரம்: சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் டி.அன்பு சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற போக்குவரத்து கிழக்கு […]