போலீசாரால் தேடப்பட்டு வரும் தென் சென்னையின் பிரபல ரவுடி C.D. மணியின் கூட்டாளிகளால், தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் செல்போனில் மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் காவல்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளரான கிரி, இரு தினங்களுக்கு முன், குற்றவழக்கு ஒன்றில் கணேசன் என்பவரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, கணேசனின் தம்பியும், CD மணி என்ற ரவுடியின் கூட்டாளியுமான தவக்களை பிரகாஷ் என்பவன், ஆய்வாளர் கிரியை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தன் அண்ணனையே […]