Police Department News

மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப் பொருளால் வெடிகுண்டு பீதி: நிபுணர்கள் நேரில்ஆய்வு செய்தனர் குறித்து ஆய்வு செய்த தமிழக கடலோர பாதுகாப்புக் குழும ஐ.ஜி அருணாச்சலம், டிஎஸ்பி பாலமுருகன் உள்ளிட்டோர்.

சென்னை மெரினா கடற்பரப்பில் கரை ஒதுங்கிய மர்மப் பொருளால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. போலீஸாரின் விசாரணையில் கடலில் மிதந்த பொருள் கப்பல்களில் பயன்படும் போயோ எனும் மிதவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சென்னை மெரினா கடற்பரப்பில் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் வழக்கம்போல் படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நினைவிடங்களின் பின்புறப் பகுதியில் ராக்கெட் வடிவிலான மர்மப் பொருள் ஒன்று கடலில் மிதந்தது. இது […]

Police Department News

மதுரை அருகே மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் பஞ்சாலை தொழிலாளி கைது: மலையில் பதுங்கியிருந்தபோது போலீஸ் சுற்றி வளைத்தது

மதுரை அருகே காதலிக்க மறுத்ததால் திருமங்கலம் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற பஞ்சாலை தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(25). பத்தாம் வகுப்பு படித்துள்ள இவர் நடுவக்கோட்டை அருகே உள்ள திரளியில் இருக்கும் தனியார் பஞ்சாலையில் வேலை பார்க்கிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியை காதலித்துள்ளார். இந்த காதலை மாணவி ஏற்கவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் கடந்த ஆண்டு […]