ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் திருவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜருக்கு 2-வது முறையாக நேற்று மிரட்டல் கடிதம் வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஜன.7-ல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கவிஞர் வைரமுத்து, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேரில் வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திருவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் 2 முறை உண்ணாவிரதப் […]