Police Department News

சீருடைக்கு அளவு எடுப்பதாகக் கூறி மாணவியை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் கைது

சீருடைக்கு அளவு எடுப்பதாகக் கூறி 8-ம் வகுப்பு மாணவியை நிர்வாணப்படுத்திய ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் கனூஜ் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவியை, அவரது ஆசிரியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இது குறித்து மாணவியின் தந்தை, “எனது மகள் கனூஜ் அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவருகிறார். என் மகளுக்கு சீருடைக்கு அளவு […]

Police Department News

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு

திருவள்ளூர் அருகே குன்னத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை சுஜாதா, நேற்று முன்தினம் மதியம் 3.30 மணியளவில், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குள் வந்தார். சுஜாதா அவரை விசாரித் துள்ளார். ‘‘நான் தொடக்க கல்வி அலுவலரை சந்தித்துவிட்டு வந்துள்ளேன். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமான குறும்படத்தை திரையிட்டுக் காட்ட விரும்புகிறேன். மாணவர்களுக்கு குறும்படம் திரையிட்டு காட்ட உரிய தேதி, நேரம் ஒதுக்கித் தாருங்கள்’’ என கேட்டுள் […]