மதுரை, பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒட்டு எண்ணும் மையத்தில் டி.ஐ.ஜி., ஆய்வு பேரையூர் டி. கல்லுப்பட்டி எழுமலை பேரூராட்சிகளில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி பேரையூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது அங்கு டி.ஐ.ஜி., பொன்னி அவர்கள் ஆய்வு செய்தார் எஸ்.பி. பாஸ்கரன் டி.எஸ்.பி. சரோஜா ஆய்வாளர்கள் காந்தி, செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி டி.ஐ.ஜி பொன்னி அவர்கள் கேட்டறிந்தார்.
Day: February 22, 2022
மதுரை தெற்கு வாசல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
மதுரை தெற்கு வாசல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு மதுரை தெற்கு வாசல் காவல் நிலையம் பின்புறம் பழைய புஞ்சை மேட்டு தெருவில் உள்ள மாநகராட்சி காலி இடத்தில் கிடந்த பழைய பொருட்கள் காய்ந்த இலைகள் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் போன்றவை இன்று நண்பகலில் தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் திரு. . பாண்டி மற்றும் மீனாட்சியம்மன் கோவில் நிலைய அலுவலர் திரு. கே.ஆர். […]
வேனில் வந்த பெண்கள் மீது தாக்குதல்; சாலை மறியல்
வேனில் வந்த பெண்கள் மீது தாக்குதல்; சாலை மறியல் மேலூர் அருகே தெற்குதெரு செம்பூர்ரோட்டில் தனியார் நூற்பாலை உள்ளது. இங்கு வேலை முடிந்து பெண் தொழிலாளர்கள் வழக்கம்போல் வேன் ஒன்றில் திரும்பிவந்தனர். அந்த வேன் மேலூரில் செக்கடிபஜார் பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் அந்த வேனை மறித்து வேன் உள்ளே சென்று பெண்களை கைகளால் அடித்து சரமாரியாக உதைத்துள்ளனர். பெண்கள் சிலர் லேசான காயமடைந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் கூட்டமாக கூடினர். […]