பிக்கிலிகாப்புக் காட்டில் வன பகுதியை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்த இருவர் கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கிலிகாப்புக் காட்டு பகுதியில் கொட்டகை அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்க்கு சென்ற வனத்துறையினர் மலையூர் பகுதியை சேர்ந்த சஞ்சீவன் (வயது .45), அதே பகுதியை சேர்ந்த சங்கர் (வயது. 37) ஆகியோர் அனுமதியின்றி யானைகள் செல்லும் வழித்தடத்தில் கொட்டகை அமைத்தும், காட்டுமரங்களை வெட்டி, ஆட்டுபட்டி அமைத்து, நாய்களை வைத்து […]
Day: January 8, 2023
பாப்பாரப்பட்டி அருகே ஆடு திருடிய 2 பேர் சிக்கினர்.
பாப்பாரப்பட்டி அருகே ஆடு திருடிய 2 பேர் சிக்கினர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 36), விவசாயி. இவர் தனது வீட்டு முன்பு உள்ள கொட்டகையில் 2 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை இவரது வீட்டு முன்பு ஆடு கத்தும் சத்தம் கேட்டு பெருமாள் கண் விழித்து எழுந்து பார்த்துள்ளார். அப்போது பெருமாளின் 2 ஆடுகளை மோட்டார் சைக்கிளில் தூக்கி வைத்து மர்ம நபர்கள் 2 பேர் […]
மேலூரில் சிறுத்தைப்புலி நடமாட்டம்?- வனத்துறையினர் தீவிர விசாரணை
மேலூரில் சிறுத்தைப்புலி நடமாட்டம்?- வனத்துறையினர் தீவிர விசாரணை மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அருகே தேவன்குளம் உள்ளது. இங்கு எம்.மலம்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் நேற்று காலை 7 மணியளவில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பறவைகள் திடீரென கூச்சலிட்டு பறப்பதையும் அதன் அருகே 2 சிறுத்தை புலிகள் ஓடியதை பார்த்து அதனை அவர் செல்போனில் படம் எடுத்துள்ளார். அந்த 2 சிறுத்தைப்புலிகளும் அருகிலுள்ள வாழைத்தோப்புக்குள் சென்று மறைந்துள்ளன. இந்த வீடியோ மேலூர் பகுதியில் வைரல் […]
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் இழுபறி- போராட்டத்தால் போலீஸ் குவிப்பு
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் இழுபறி- போராட்டத்தால் போலீஸ் குவிப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். உலக பிரசித்தி பெற்ற இந்த போட்டிகளை இந்த ஆண்டு சிறப்பாக நடத்துவதற்கு மும்முரமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகை அன்று (15-ந்தேதி) அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு […]
திருச்சி மாநகரில் 24 இடங்களில் போலீசார் அதிரடி வாகன சோதனை- நூதன தண்டனை
திருச்சி மாநகரில் 24 இடங்களில் போலீசார் அதிரடி வாகன சோதனை- நூதன தண்டனை திருச்சி மாநகரில் நாளுக்கு நாள் இரு சக்கர வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் சாலையில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமலும், தலைக்கவசம் அணியாமல் செல்வதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகர காவல் புதிய ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் சத்ய பிரியா […]
விவசாயியை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 4 பேருக்கு வலை வீச்சு
விவசாயியை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 4 பேருக்கு வலை வீச்சு மதுரை மேலூரை அடுத்த வண்ணம்பாறைபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), விவசாயி. இவர் சம்ப வத்தன்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் (49), அவரது மனைவி செல்வி (45) மற்றும் மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ் (19), தமிழரசன் (18) ஆகிய 4 பேரும் கும்பலாக வந்து தங்களை பற்றி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு உளவு கூறியதாக […]
மனைவிக்கு வரதட்சணை கொடுமை
மனைவிக்கு வரதட்சணை கொடுமை மதுரை திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 25). இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:- எனக்கும் துருண் குமாருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு பெற்றோர் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். மேலும் ரூ. 10 லட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தனர். மதுரை பாலமேடு அரசு […]
அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அரசு மருத்துவமனை மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தி, மருத்துவரைத் தகாத வார்த்தையால் திட்டிய கிராம உதவியாளர் மற்றும் அவரது சகோதரிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வரும் வேல்முருகன் மற்றும் அவரது சகோதரி சுஜாதா ஆகிய இருவரும், தமது தந்தை கலியனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி, […]
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது மதுரையில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரசாத் ஆலோசனையின் பேரில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவத்தன்று மதியம் பைபாஸ் ரோடு பகுதியில் போலீசார் ரோந்து […]