சட்டம் சட்டப்பிரிவுகளுக்கு மரியாதை சாதாரணமாக நீங்கள் செய்வது குற்றம் என்று சொன்னாலும், அது குற்றமே எனத் தெரிந்தாலும் கூட, யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். அதே குற்றம் எனக்கூறும் சட்டத்தின் எண்ணைக் குறிப்பிட்டு சொல்லிப் பாருங்கள். நீதிபதி கூட பயப்படுவார். இதுதான் சட்டப் பிரிவுக்கு உள்ள மதிப்பு. இதுவரையிலும், விழிப்புணர்வு செய்பவர்கள் எல்லோருமே, சமுதாய விழிப்புணர்வைத்தான் செய்கிறார்களே ஒழிய, சட்ட விழிப்புணர்வைப் பற்றியோ, சட்டத்தை தவறாக கையாள்பவர்களைக் களைஎடுப்பது எப்படி? என்பது பற்றியோ கற்றுத்தரவும் இல்லை. கவலைப்படவும் இல்லை. […]
Day: January 2, 2023
ஜல்லிக்கட்டு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
ஜல்லிக்கட்டு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு உலகப்புகழ்பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் இன்று அலங்காநல்லூர் வாடிவாசலை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது டி.எஸ்.பி பாலசுந்தரம், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் மற்றும் விழா குழுவினர், போலீசார் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், பார்வையாளர் கேலரி அமைப்பது, காளைகள் […]
கூலி தொழிலாளி உள்பட 2 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது
கூலி தொழிலாளி உள்பட 2 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது மதுரை பாலரெங்கா புரத்தை சேர்ந்த கண்ணன் மகன் சிவகார்த்திகேயன் (வயது 19). இவர் முத்துப்பட்டி, பெருமாள் நகரில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். அங்கு வந்த 5 பேர் கும்பல் அவரிடம் கஞ்சா கேட்டு மிரட்டியது. இதற்கு சிவகார்த்திகேயன் மறுத்து விட்டார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை, பீர்பாட்டிலால் தாக்கியது. இது குறித்து சிவகார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை […]
சொத்து பிரச்சினை: சகோதரியின் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர்
சொத்து பிரச்சினை: சகோதரியின் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் திருமங்கலம் அருகே உள்ள திரளியை சேர்ந்த அசோக் குமாரின் மனைவி சத்யா(வயது36), இவருடைய அண்ணன் சந்தோஷ் குமார்(39) புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார். சத்யா குடியிருந்த வீட்டை அவரது தந்தை அவருக்கே எழுதி கொடுத்து விட்டார். இதனால் அண்ணன், தங்கைக்கு சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சந்தோஷ்குமார் நேற்று சத்யா வீட்டுக்கு வந்தார். சொத்து பிரச்சினை காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தோஷ்குமார், சத்யா வீட்டுக்குள் […]
கோவிலில் புகுந்து வேல் திருடியவர் கைது
கோவிலில் புகுந்து வேல் திருடியவர் கைது மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னரெட்டிபட்டியை சேர்ந்தவர் மகாதேவன்(37). இவர் சென்னையில் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார். வருடம் தோறும் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து பாத யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு மாலை அணிந்து பாதயாத்திரை செல்வதற்காக 15 தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். மேலும் பழனி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ரூ. 1,500 மதிப்புள்ள பித்தளை வேல் வாங்கி சின்னா ரெட்டிபட்டியில் […]
காவல்நிலையத்தில் CSR பெற என்ன செய்ய வேண்டும்?
காவல்நிலையத்தில் CSR பெற என்ன செய்ய வேண்டும்? காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச் சான்றிதழ் : இந்திய தண்டணைச் சட்டங்களிலுள்ள IPC (சில) பிரிவுகளின்படி தண்டிப்பதற்கான குற்றம் ஏதாவது நடந்து இருந்தாலும், அல்லது நடக்கப் போவதை அறிந்தாலும் பொதுமக்களாகிய நாம் போலீஸ் ( Police ) ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், ( CrPC ) பிரிவு 39-ல் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களாகிய நாம் […]
கள்ளக் காதலால் காதை இழந்த மூதாட்டி – உயிர் ஊசலாடி வருகிறது.
கள்ளக் காதலால் காதை இழந்த மூதாட்டி – உயிர் ஊசலாடி வருகிறது. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கங்கப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன் இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது.52) இவர் கடந்த 27ஆம் தேதி அன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை, இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் ஜெயலட்சுமி மயங்கி நிலையில் கிடந்தார்,அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி […]
மாரண்டஅள்ளி அருகே பள்ளி மாணவன் மாயம்!
மாரண்டஅள்ளி அருகே பள்ளி மாணவன் மாயம்! தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பி. செட்டி அள்ளியை பகுதியோ சேர்ந்தவர் மாதப்பன் மகன் நித்தீஷ் 15 வயது அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறான். சரியாக படிக்காமல் இருந்துள்ளான். தற்போது பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளான். இந்த நிலையில் பெற்றோர் அவனை படிக்கும்படி கூறியுள்ளனர். இதனால் கோபித் துக்கொண்டு கடந்த 29ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய நித்தீஷ் மீண்டும் திரும்பவில்லை பல்வேறு […]