பாலக்கோடு காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையத்தில்பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து காவலர்களும் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர் .சிறப்பு விருந்தினராக பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் கலந்துகொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Day: January 16, 2023
பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் கொண்டாடப்பட்டது.பொங்கலை முன்னிட்டு பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு பேரூராட்சி சார்பில் கோலப் போட்டி, பாட்டு போட்டி, நடன போட்டி, கயிறு இழுத்தல், பானை உடைத்தல், மியூசிக்கல் சேர் போன்ற பல்வேறு போட்டிகள் […]
கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிவகங்கையைச் சேர்ந்த பாலசுந்தரம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை கிராமத்தில் சன்டி வீரன்சுவாமி கோயில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோயிலில் தைத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இத்திருவிழாவில் யாருக்கும் முதல் மரியாதையோ அல்லது கோவில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு மரியாதைகளோ செய்யப்படாது. கடந்த சில ஆண்டுகளாக சசிபாண்டிதுரை […]
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா இன்று (திங்கட்கிழமை) மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் தொடங்கியது. மதுரை -பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்ததும் வாடிவாசல் வழியாக முதல் காளைகள் பாய்ந்து வந்தது. சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக காரும், சிறந்த காளைக்கு இரு சக்கர வாகனங்கள் பரிசாக […]
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 28 காளைகளை அடக்கிய விஜய்க்கு முதலமைச்சர் வழங்கும் கார் பரிசு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு: 28 காளைகளை அடக்கிய விஜய்க்கு முதலமைச்சர் வழங்கும் கார் பரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி விஜய் தொடர்ந்து முன்னிலை வகித்தார். அவனியாபுரம் கார்த்தி இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தார். காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு, மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 737 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. […]
சட்டம் இயற்றுவது முற்றிலும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டது: உச்ச நீதிமன்றம்
சட்டம் இயற்றுவது முற்றிலும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டது: உச்ச நீதிமன்றம் சட்ட ஆணையத்தை சட்டபூா்வ அமைப்பாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அது தொடா்பான உத்தரவில், ‘சட்டம் இயற்றுவது முற்றிலும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டது’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 21-ஆவது சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டுடன் நிறைவடைந்தது. அதற்குப் பிறகு நீண்ட நாள்களாக 22-ஆவது சட்ட ஆணையம் அமைக்கப்படாமலும், 21-ஆவது […]