மதுரையில் ரூ. 18 லட்சம் மோசடி; தம்பதி மீது புகார் மதுரை ஒத்தக்கடை சுதந்திரா நகரை சேர்ந்தவர் பாண்டிசெல்வம். இவர் ஒத்தக்கடை போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சாம்சன்பால் தன்னிடம் உள்ள காரை கொடுப்பதாக கூறி ரூ. 18 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டனர். இதற்கு உடந்தையாக அவரது மனைவி சக்திபிரியா, உறவினர் தேவராஜ் ஆகியோர் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். […]
Month: December 2022
மேலூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
மேலூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியில் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாவினிப்பட்டியில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. குடிநீர் பிரச்சினையால் அந்தப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதை கண்டித்து இன்று காலை பொதுமக்கள் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதற்காக 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த […]
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது மேட்டு நீரேத்தான் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று நள்ளிரவு 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் புகுந்து சன்னதிக்கு முன்புள்ள உண்டியலை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து தப்பினார். அவர் மஞ்சள் டி-சர்ட், ப்ளூ கலர் ட்ராக் சூட் அணிந்திருந்தார். கண்களை தவிர்த்து முகம் முழுவதையும் துணியால் மறைத்திருந்தார். அவர் உண்டியலை உடைத்து […]
வாகனம் மோதி இளம்பெண் சாவு
வாகனம் மோதி இளம்பெண் சாவு மதுரை-திருச்சி 4 வழிச்சாலை கூத்தப்பன்பட்டி பகுதியில் சர்ச் உள்ளது. இந்த சர்ச் அருகே நேற்று இரவு நடந்து சென்ற இளம்பெண் மீது நாகர்கோவிலில் இருந்து திருச்சி சென்ற மினி வேன் மோதி சென்றது. இதில் அந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார். அந்த இடத்தில் நிற்காமல் சென்ற மினி வேன் டிரைவர் திருச்சி முண்டூரை சேர்ந்த இருதயராஜ் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் […]
20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குநராக டிஜிபி Dr.அபாஷ்குமார்,IPS நியமிக்கப்பட்டுள்ளார் ஊர்க்காவல் படை தலைமை கமாண்டண்ட் ஆக டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தலைமையக ஏ.டி.ஜி.பி.யாக உள்ள ஜி.வெங்கடராமனுக்கு கூடுதலாக காவல்துறை நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை டி.ஜி.பி. அலுவலக ஐஜியாக டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரியாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் சரக டிஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி எம்.எஸ்.முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். கடலோர […]
மதுரை அய்யர் பங்களாவில் அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த 2 பேர் கைது
மதுரை அய்யர் பங்களாவில் அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த 2 பேர் கைது மதுரை அய்யர் பங்களா ஸ்ரீநகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது66). பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று ராஜேஸ்வரி வெளியே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்றனர். அதில் ¼ பவுன் தங்க கடிகாரம், செல்போன், ஆதார், பான் கார்டுகள், ரூ.1500 ரொக்கம் ஆகியவை இருந்தன. இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் […]
மதுரையில் வாலிபர் கொலையில் 4 பேர் சிக்கினர்
மதுரையில் வாலிபர் கொலையில் 4 பேர் சிக்கினர் மதுரை விளாங்குடியை அடுத்த கரிசல்குளம் அண்ணா மெயின் தெருவை சேர்ந்தவர் பூமன்காளை என்பவரின் மகன் பூமிநாதன் (வயது 19). கட்டிட வேலை பார்த்து வந்த இவர், நேற்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. அந்த கும்பலிடம் இருந்து பூமிநாதன் தப்பி ஓடினார். இருந்தபோதிலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் விடாமல் துரத்தி சென்றனர்.அவர்களிடம் இருந்து உயிர் தப்புவதற்காக […]
சமயநல்லூர் அருகே பாலத்தில் கார் மோதி சிறுவன்-பாட்டி பலி
சமயநல்லூர் அருகே பாலத்தில் கார் மோதி சிறுவன்-பாட்டி பலி கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 39). இவரது மனைவி நான்சி (38). இவர்களது மகன் ஷேரப் (வயது 3). கிருஷ்ணகுமார் ராமேசுவரம் கோவிலுக்கு செல்லதிட்டமிட்டார். அதன்படி தனது மனைவி, மாமியார் நிர்மலா (54) மற்றும் மகனை அழைத்துக்கொண்டு பெங்களூருவில் இருந்து நேற்று இரவு காரில் புறப்பட்டார். காரை பெங்களூரு தாசர ஹள்ளியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (36) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர்களது கார் இன்று […]
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு தயார் நிலை
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு தயார் நிலை சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி மதுரை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை வார்டு […]
புத்தாண்டு கொண்டாட்டம்: மதுரை மாநகரில் 1200 போலீசார் பாதுகாப்பு
புத்தாண்டு கொண்டாட்டம்: மதுரை மாநகரில் 1200 போலீசார் பாதுகாப்பு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை (31-ம் தேதி) இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாக, அமைதியாக கொண்டாடும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி நாளை இரவு பொது இடம், சாலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவது சிறந்தது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. புத்தாண்டு […]