மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறை சார்பில் கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து காவல் சார்பில் உயரதிகாரி களின் உத்தரவுக்கினங்க கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் குடிபோதையில் கைப்பேசி உபயோகத்தி வாகன ஓட்டினால் விளையும் ஆபத்து ஏற்படும் என்பது போன்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
Day: January 18, 2023
பாப்பாரப்பட்டி அருகே பனைக்குளம் காட்டமராஜா கோவிலில் பொங்கல் வைப்பதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கு
காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாப்பாரப்பட்டி அருகே பனைக்குளம் காட்டமராஜா கோவிலில் பொங்கல் வைப்பதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்குகாவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காட்டமராஜா கோவில் பாப்பாரப்பட்டி அருகே உள்ளது பனைக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காட்டமராஜா கோவிலில் இரு சமூகத்தினர் வழிபட்டு வருகிறார்கள். மேலும் காணும் பொங்கல் அன்று, இரு சமூகத்தினரும் ஒன்றிணைந்து கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். இந்தநிலையில் காணும் பொங்கலான நேற்று ஒரு சமூகத்தினர் கோவிலுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கோவிலில் […]
நீதி மன்றங்களுக்கு தேவை சட்டம்தான் ஆங்கிலம் அல்ல! தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் சேர்மன் பி.எஸ்.அமல்ராஜ்
நீதி மன்றங்களுக்கு தேவை சட்டம்தான் ஆங்கிலம் அல்ல! தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் சேர்மன் பி.எஸ்.அமல்ராஜ் சமீபத்தில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் நன்கு ஆங்கிலம் பேசத்தெரிந்திருப்பது முக்கியமல்ல சட்டம் தெரிந்திருக்க வேண்டும் அதுதான் முக்கியம் என்றார். எழும்பூர் நீதி மன்றத்தில் அமல்ராஜ் அவர்கள் ஜுனியர் வக்கீலாக இருக்கும் போது அவருடைய சீனியர் திருஞான பூபதி அவர்கள் கிரிமினல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர் CRPC IPC பிரிவுகளை விரல் […]
ஸ்ரீரங்கத்தில் பிச்சைக்காரர்களுக்குள் சண்டை – ஒருவர் கொலை
ஸ்ரீரங்கத்தில் பிச்சைக்காரர்களுக்குள் சண்டை – ஒருவர் கொலை திருச்சி உய்யக் கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (59). இவர் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இவர் குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்து சில மாதங்களாக ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் யாசகம் பெற்று வந்தார்.இந்நிலையில் ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் இவருக்கு பக்தர்கள் 10 ரூபாயை தானம் செய்தனர். அப்போது மற்றொரு பிச்சைக்காரர் முருகேசனுக்கும் இவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் முருகேசன் கல்லால் […]
சென்னை மெரினாவில் குவிந்த மக்கள்: ரோந்துப் பணியில் டிஜிபி சைலேந்திர பாபு!
சென்னை மெரினாவில் குவிந்த மக்கள்: ரோந்துப் பணியில் டிஜிபி சைலேந்திர பாபு! காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர் தமிழகம் முழுவதும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வந்தது பொங்கல் பண்டிகையின் இறுதி நிகழ்வான காணும் பொங்கலன்று பொது இடங்களில் மக்கள் குவிந்தனர் காணும் பொங்கலன்று தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க காவல்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர் சென்னை கடற்கரைகளில் மட்டும் சுமார் 1,200 […]
மதுரையில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
மதுரையில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி போக்குவரத்து போலீசார் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் கோரிப்பாளையம் சந்திப்பில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டிகளிடம், “தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன், அதிவேகமாக வாகனம் ஓட்ட […]
மதுரை வாடிப்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
மதுரை வாடிப்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாடிப்பட்டி போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் சரவணமுருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜய ரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பேசும்போது, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றியும், தலைக்கவசத்தின் […]
மதுரை ரெயில் நிலையம் முன்பு கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
மதுரை ரெயில் நிலையம் முன்பு கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது மதுரை ரெயில் நிலைய முன்பு திலகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகப்படும் வகையில் கிழக்கு நுழைவாயில் அருகே நின்ற ஆட்டோவை கண்காணித்தார். அந்த ஆட்டோவில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் மெயின் ரோடு சிராக்உசேன் மகன் முகமது அனிபா (36), தனக்கன்குளம் வெங்களமூர்த்திநகர் மீரா உசேன் மகன் இம்ரான் கான் (22) […]