23 கொலைகள்; 271 பேர் விபத்தில் பலி; ரௌடிகள் லிஸ்ட்டில் 564 பேர்! – 2023 வேலூர் க்ரைம் ரிப்போர்ட் 2023-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தில் மட்டும் 11,577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ‘க்ரைம்’ ரிப்போர்ட்டை நீட்டுகிறது, அந்த மாவட்டக் காவல்துறை. ஆண்டு தொடக்கத்திலிருந்து இறுதி வரை 23 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பதிவான 23 கொலை வழக்குகளிலும் தொடர்புடைய 41 எதிரிகளும் கைது செய்யப்பட்டனர். இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் ஆயுள் […]
Month: January 2024
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்டம் நரிக்குடி காவல் நிலையத்தின்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி உட்கோட்டம் நரிக்குடி காவல் நிலையத்தின் புதிய சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளராக திரு. முத்துக்குமார் அவர்கள் இன்று பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து நரிக்குடி காவல் நிலைய சரக இன்ஸ்பெக்டர், சக காவலர்கள், தனிப்பிரிவு காவலர்கள், என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நீரில் தத்தளித்த மாணவியை காப்பாற்ற குதித்த இளம்பெண்கள்..இருவர் உயிரிழந்த பரிதாபம்
நீரில் தத்தளித்த மாணவியை காப்பாற்ற குதித்த இளம்பெண்கள்..இருவர் உயிரிழந்த பரிதாபம் கண்மாயில் குளிக்க சென்ற பெண்கள்தூத்துக்குடி மாவட்டம் மேல மருதூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மேனகா. இவர் 9ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கல்லூரி மாணவி கனிச்செல்வி மற்றும் இளம் பெண் கலைச்செல்வி ஆகியோருடன் கண்மாயில் குளிக்க சென்றார். அங்கு மேனகா குளிக்கும்போது நீரில் மூழ்கி தத்தளித்ததாக கூறப்படுகிறது. அதனைப் பார்த்து பெண்கள் இருவரும் மேனகாவை காப்பாற்ற நீரில் இறங்கியுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாணவியை […]
மதுரை விமான நிலையத்தில், துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 91 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 436 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில், துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 91 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 436 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, பயணி ஒருவரின் உடமைகளில் […]
மதுரையில் தனியார் கல்லூரி வாசலில் தீக்குளித்த வாலிபர் துடிதுடித்து பலி; போலீஸ் விசாரணை
மதுரையில் தனியார் கல்லூரி வாசலில் தீக்குளித்த வாலிபர் துடிதுடித்து பலி; போலீஸ் விசாரணை மதுரை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் நிரப்பிய கேனுடன் வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனால் அவரது உடை முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. மேலும் வெப்பம் தாங்காமல் சாலையில் சிறிது தூரம் ஓடிய அந்த நபர் ஒரு கட்டத்தில் சாலையிலேயே கரிக்கட்டையாக கீழே […]
கள்ளக்காதலியை மிரட்டிய கொத்தனார் படுகொலை; விளாத்திகுளத்தில் ஓட்டுநர்கள் வெறிச்செயல்
கள்ளக்காதலியை மிரட்டிய கொத்தனார் படுகொலை; விளாத்திகுளத்தில் ஓட்டுநர்கள் வெறிச்செயல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 32). இவர் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகாத நிலையில் இவருக்கும், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் நீண்ட நாட்களாக தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த திருமணமான பெண் சமீப காலமாக அவரது உறவுக்காரரான அதே பகுதியைச்சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார்(39) என்பவருடனும் […]
திண்டுக்கல்: நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல்: நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 ஆண்டுகள் சிறை திண்டுக்கல் மாவட்டம் அருகே முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளரும், அ.ம.மு.க பிரமுகருமான ஜோதி முருகன், கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியே சொல்ல முடியாமலும் பெற்றோரிடம் சொல்ல முடியாமலும் மாணவிகள் தவித்து வந்தனர். இது குறித்து கல்லூரியில் பயிலும் 3 மாணவிகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைதொடர்ந்து கல்லூரி வளாகத்தில் […]
தீயணைப்புத் துறை டூ ஐ.ஏ.எஸ் அதிகாரி.. ஃபீனிக்ஸ் மங்கையின் வெற்றிக்கதை!
தீயணைப்புத் துறை டூ ஐ.ஏ.எஸ் அதிகாரி.. ஃபீனிக்ஸ் மங்கையின் வெற்றிக்கதை! தீயணைப்புத் துறையின் முதல் பெண் அதிகாரியான பிரியா ரவிச்சந்திரன், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தீயணைப்புத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வு செய்யப்படுவதும் இதுவே முதல்முறை என்பது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. காவல்துறையில் பெண்கள் பலர் சாதித்த போதும் 2003ஆம் ஆண்டு வரை தீயணைப்புத் துறையில் பெண்கள் யாரும் சேரவில்லை. இந்த சூழலில் தான், தமிழ்நாடு அரசின் குரூப்-1 தேர்வில் வென்றதன் […]
₹1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பன் எரித்துக் கொலை.. சினிமாவை விஞ்சும் அதிர்ச்சி சம்பவம்
₹1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பன் எரித்துக் கொலை.. சினிமாவை விஞ்சும் அதிர்ச்சி சம்பவம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த அல்லாணுார் பகுதியில், கடந்த செப்டம்பர் மாதம் ஒரு குடிசை வீடு முற்றிலும் தீயில் எரிந்தது. வீட்டிற்குள் உடல் கருகி இறந்த நிலையில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உடற்கூறாய்வில் அந்த நபர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, உடலில் தீ வைத்து எரித்து இருப்பது தெரியவந்தது. கொலை சம்பவத்தில் தொடர்புசெடைய சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், […]
விமானத்தில் சென்று கஞ்சா பிஸினஸ்… ‘காஸ்ட்லி’ போதை வியாபாரிகள் சிக்கியது எப்படி?
விமானத்தில் சென்று கஞ்சா பிஸினஸ்… ‘காஸ்ட்லி’ போதை வியாபாரிகள் சிக்கியது எப்படி? சென்னையில் இருந்து திரிபுராவுக்கு விமானத்தில் சென்று கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த இருவர் போலீசில் சிக்கியுள்ளனர். சென்னை தரமணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து தரமணி உதவி ஆணையாளர் அமீர் அஹமது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சென்னை தரமணி ரயில் நிலையம் அருகில், […]