ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் கழுத்தில் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோயில் பின்புறத்தில் உள்ள கடற்கரை அருகே முட்புதரில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று மாலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டர். அங்கு, […]
Month: March 2024
விளையாட்டு மைதானத்தில் பொறியாளர் அடித்து கொலை
விளையாட்டு மைதானத்தில் பொறியாளர் அடித்து கொலை கொருக்குப்பேட்டையில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் மாநகராட்சி நவீன விளையாட்டு அரங்கம் தற்போது வருகிறது. அந்த பகுதியில் நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தியதில், […]
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.8 கோடி தங்கம் பறிமுதல்: 2 பெண் பயணிகள் கைது
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.8 கோடி தங்கம் பறிமுதல்: 2 பெண் பயணிகள் கைது துபாயிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புடைய 12 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக, 2 பெண் பயணிகளை கைது செய்தனர். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் […]
பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில் வீசி விட்டு தப்பி ஓடிய வாலிபர் சிக்கினார்
பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில் வீசி விட்டு தப்பி ஓடிய வாலிபர் சிக்கினார் சேலத்தில் பெண் கொலை வழக்கில் தவறான தொடர்பில் இருந்த 3 டிரைவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வந்த நிலையில் ஹெல்மெட் அணிந்து தப்பி ஓடிய வாலிபர் போலீசாரின் பிடியில் சிக்கினார். சேலம் பெரமனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (45). 4 ரோடு பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சுகுணவள்ளி (40) என்பவரை கடந்த […]
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.36.13 கோடி மோசடி செய்தவர் கைது
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.36.13 கோடி மோசடி செய்தவர் கைது தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முப்பிலிவெட்டி பகுதியை சேர்ந்த பொன்ராஜ் மனைவி சண்முகலட்சுமி(33). இவரிடம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமரேசன்(46) மற்றும் சிலர், தாங்கள் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால் நல்ல சம்பளத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய சண்முகலட்சுமி ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார். ஆனால் அரசு பள்ளி ஆசிரியர் […]
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி மகன் உட்பட 38 பேர் குண்டாசில் கைது: காவல் துறை நடவடிக்கை
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி மகன் உட்பட 38 பேர் குண்டாசில் கைது: காவல் துறை நடவடிக்கை சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி தர்கா மோகனின் மகன் உட்பட 38 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் தொடர் கஞ்சா விற்பனை செய்த பிரபல ரவுடி தர்கா மோகனின் மகன் பிரதீப் (27), ஜோதிகணேஷ் (32), திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த சூர்யா (27), […]
மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 செல்போன், செயின் பறிப்பு
மயிலாப்பூர் பங்குனி திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 6 செல்போன், செயின் பறிப்பு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 10 நாட்களாக மிக வெகு விமரிசையாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பங்குனி திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, கடந்த 10 நாட்களில், 6 பேரிடம் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒருவரிடம் ஒரு சவரன் […]
கால்பந்து விளையாட பயிற்சி தருவதாக அழைத்து சென்று 3, 4ம் வகுப்பு மாணவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு: 8, 9ம் வகுப்பு மாணவர்கள் போக்சோவில் கைது
கால்பந்து விளையாட பயிற்சி தருவதாக அழைத்து சென்று 3, 4ம் வகுப்பு மாணவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு: 8, 9ம் வகுப்பு மாணவர்கள் போக்சோவில் கைது சேத்துப்பட்டு பகுதியில் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவர்களை கால்பந்து விளையாட பயிற்சி அளிப்பதாக மொட்டை மாடிக்கு அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு அளித்த தனியார் பள்ளியை சேர்ந்த 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை சேத்துப்பட்டு பகுதியை […]
ஹோலி கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர்கள் இருவருக்கு சரமாரி அடி உதை: வடமாநில வாலிபர்கள் 5 பேரிடம் விசாரணை
ஹோலி கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர்கள் இருவருக்கு சரமாரி அடி உதை: வடமாநில வாலிபர்கள் 5 பேரிடம் விசாரணை கும்மிடிப்பூண்டி அருகே ஹோலி கொண்டாட்டத்தின் போது கல்லூரிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவர்களுக்கு சரமாரியா அடி உதை விழுந்தது. போலீசார் 5 வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சென்மேரீஷ் தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் – புஷ்பா தம்பதியரின் மகன் குடியரசன் (21). இவர் சென்னையில் உள்ள நந்தனம் கலைக் கல்லூரியில் எம். காம் முதலாம் ஆண்டு […]
கஞ்சா விற்ற 4 பேர் கைது
கஞ்சா விற்ற 4 பேர் கைது சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக புளியந்தோப்பு உதவி கமிஷனர் ராஜாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று முன்தினம் ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலை அருகே உள்ள பூங்காவில் ஓட்டேரி போலீசார் சந்தேகத்தின் பேரில் 4 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்த ஓட்டேரி பகுதியைச் […]