உப்பள தொழிலாளி கொலை; தாயுடன் பழகியதால் மகன்கள் தீர்த்துக்கட்டினர் தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பள தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3பேரை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி மகன் முனியசாமி (45). உப்பள தொழிலாளி. இவருக்கும் உடன் வேலைபார்க்கும் ஒரு பெண்ணிற்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கணவரை இழந்த அந்த பெண் இரு மகன்களுடன் வசித்து வந்தார். இதனால் முனியசாமிக்கும் அந்த பெண்ணின் மகன்களான சுதாகர் (26), சதீஷ் (24) […]
Day: March 26, 2024
சீர்காழி அருகே 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்
சீர்காழி அருகே 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொடக்காரமூலை கிராமத்தில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1,350 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்புப்பிரிவு போலீசார் சோதனையில் புதுச்சேரி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அன்புச்செல்வி என்ற பெண்ணை கைது செய்தனர்.
பழனி பங்குனி உத்திர திருவிழா நேரத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலியான இ-மெயில் அனுப்பிய நபரை கைது செய்து சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
பழனி பங்குனி உத்திர திருவிழா நேரத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலியான இ-மெயில் அனுப்பிய நபரை கைது செய்து சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். கடந்த 23.03.2024 ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் இ-மெயில் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் பழனி ரயில் நிலையத்தில் ரயில்வே […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து – இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழப்பு
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து – இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழப்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி கிராம பகுதியில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாசர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (20), பழனி (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். […]