பெண்ணிடம் அத்து மீறியவர் கைது மதுரை K. புதூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மெடிக்கலில் மருந்து வாங்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த சுந்தரராஜன்பட்டியை சேர்ந்த பிலாவடியான் வயது (28) என்பவர் அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றார். இதனை கண்டித்த அவரது கணவரையும் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கே.புதூர் போலீசார் பிலாவடியானை கைது செய்தனர்.
Month: April 2024
திருச்சி மாநகரில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் CCTV கேமராக்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த காவல் ஆணையர்
திருச்சி மாநகரில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் CCTV கேமராக்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த காவல் ஆணையர் இன்று (05.04.2024)-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களும் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் செலவின பார்வையாளர் திரு.சரம்தீப்சின்ஹா, I.R.S, அவர்களும், திருச்சி மாநகரத்தில் செயல்பட்டு வரும் 01 முதல் 09 வரையிலான சோதனை சாவடிகளில் இயங்கி […]
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடை பயிற்சி செய்த காவலர்களை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர்
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடை பயிற்சி செய்த காவலர்களை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர் திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று 06.04.2024 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் கண்மாயில் மூழ்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்
மதுரை அலங்காநல்லூர் பகுதியில் கண்மாயில் மூழ்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அரியூர் பகுதியில் கண்மாய்க்குள் மூதாட்டி ஒருவர் பாறையை பிடித்துக் கொண்டு நீரில் மூழ்கியபடி இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அலங்காநல்லூர் தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் மற்றும் வீரர்கள் பாஸ்கரன் சரவணன் மணி மதன் மற்றும் குழுவினர்கள் கண்மாய் நீர் கண்மாய் தண்ணீருக்குள் உயிருக்கு […]
மதுரை காவல் நிலையங்களில் ஆள் பற்றாக்குறையால் போலீசாருக்கு பணிச்சுமை, மற்றும் மன அழுத்தம்
மதுரை காவல் நிலையங்களில் ஆள் பற்றாக்குறையால் போலீசாருக்கு பணிச்சுமை, மற்றும் மன அழுத்தம் மதுரை காவல் நிலையங்களில் பலர் ‘மாற்றுப் பணியாக’ வேறு பிரிவுகளில் பணியாற்றுவதால் ஆள் பற்றாக்குறையால் போலீசாருக்கு பணிச்சுமையையும் மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது தேர்தலையொட்டி மதுரையில் போலீசார் பலர் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டனர், இதில் சிலர் தங்கள் குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்களை கூறி மாற்றுப் பணியாக மதுரைக்குள்ளேயே சிறப்பு பிரிவுகளில் கேட்டு பெற்று பணியாற்றி வருகின்றனர், இன்னும் சிலர் தங்களிடம் மாற்றப்பட்ட ஸ்டேஷன்களில் […]
மதுரையில் பதட்டமான ஓட்டு சாவடியில் எஸ் பி ஆய்வு
மதுரையில் பதட்டமான ஓட்டு சாவடியில் எஸ் பி ஆய்வு மதுரை தேனி தொகுதிக்கு உட்பட்ட. உசிலம்பட்டியில் பதட்டமான ஓட்டு சாவடிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து எஸ்.பி., அர்விந்த் அவர்கள் நேற்று ஆய்வு செய்தார் . உசிலம்பட்டி தொகுதியில் 322 ஓட்டு சாவடி மையங்களில் 90 பூத்க்கள் பதட்டமானவை உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூர் உத்தப்ப நாயக்கனூர் பகுதியில் உள்ள ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு அவசர நேரத்தில் போலீசார் எளிதாக மையத்திற்கு செல்ல ரோடு வசதி உட்பட அடிப்படை வசதிகளை எஸ். […]
மதுரையில் முன்விரோதம் காரணமாக ஆயுதங்களுடன் மோதி கொண்ட வாலிபர்கள் கைது
மதுரையில் முன்விரோதம் காரணமாக ஆயுதங்களுடன் மோதி கொண்ட வாலிபர்கள் கைது முன்விரோதத்தில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட ரவுடிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மதுரை சிந்தாமணி கண்ணன் காலனி சேர்ந்தவர் சக்திவேல் (24) இவருக்கும் கண்ணன் காலனி குமரன் தெருவை சேர்ந்த 19 வயதுடைய வாலிபருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் அவரது நண்பர்களான சரவணன்,, முத்துப்பாண்டி மற்றும் அருண்பாண்டி ஆகியோருடன் கண்ணன் காலனி கருப்பசாமி கோயில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது […]
உசிலம்பட்டி அருகே கிணற்றில் குளிக்க சென்றவர்கள் நீரில் மூழ்கி பலி
உசிலம்பட்டி அருகே கிணற்றில் குளிக்க சென்றவர்கள் நீரில் மூழ்கி பலி உசிலம்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்றவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருகட்டான் பகுதியைச் சேர்ந்த கணேசன் ஆனந்த் என்ற பாண்டி (38) மற்றும் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் 22 ஆகிய இருவரும் உறவினர்கள் இவர்கள் சீமானூத்து கிராமத்தில் அன்னக்கொடி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றவர்கள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் […]
மதுரை பாண்டி கோவில் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலி
மதுரை பாண்டி கோவில் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலி மதுரை விரகனூரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (26 ) இவர் தனது டூவீலரில் தனது நண்பரான விஷ்ணுவுடன் மதுரை பாண்டி கோயில் ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு டூவீலரில் தனது நண்பரான அத்வைத் என்பவருடன் வந்த அண்ணாநகரைச் சேர்ந்த ஸ்டாலின் பால் (23) என்பவர் ஆனந்துராஜின் டூவீலரில் மோதினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆனந்தராஜ் பலத்த காயமடைந்து சம்பவ […]
மதுரையில் முதியவரை தாக்கியவர் கைது
மதுரையில் முதியவரை தாக்கியவர் கைது மதுரை காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் உதயகுமார் வயது (44 )இவரும் மேல பொன்னகரம் ஆறாவது தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் வயது (39 )என்பவரும் சில தினங்களுக்கு முன் பாண்டியன் நகரில் மதுபோதையில் தகராறு செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி வயது (64) இருவரையும் தட்டிக் கேட்டுள்ளார்.அந்த ஆத்திரத்தில் நேற்று முன்தினம் உதயகுமார் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் இணைந்து பாண்டியை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பியுள்ளனர். […]