வாளுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது மதுரை ஜெய்ஹிந்த் புரம் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் அன்புதாசன் மற்றும் போலீசார் சோலை அழகுபுரம் சித்தி விநாயகர் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை கண்டு தப்பியோட முயன்ற வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் பெரிய வாள் ஒன்று இருந்தது தெரியவந்தது.மேலும் அவரிடம் விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் வயது (24) என்பதும் கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் நண்பரை கொலை […]
Month: April 2024
திண்டுக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணி புரியும் காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர்,தபால் வாக்குப்பதிவு செய்யும் மையங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணி புரியும் காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர்,தபால் வாக்குப்பதிவு செய்யும் மையங்கள் நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணி புரியும் காவல்துறையினர், ஊர் காவல்படையினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் இதர அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டன. இன்று (16.04.2024) திண்டுக்கல் மாவட்ட […]
திருச்சி மாநகரில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
திருச்சி மாநகரில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு 12.04.2024 தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர்களால் சமத்துவநாள் உறுதிமொழியானது எடுத்துக்கொள்ளப்பட்டது.
தகராறில் வாலிபர் மீது டூவீலர் ஏற்றி தாக்குதல்
தகராறில் வாலிபர் மீது டூவீலர் ஏற்றி தாக்குதல் மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் கீர்த்தி ராஜ் வயது (19) சில தினங்களுக்கு முன் கணபதி நகர் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கீர்த்தி ராஜ் மீது மோத வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணபதி நகரில் உள்ள தனது […]
காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி?
காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி? பொதுவாக நீங்கள் குற்றம் தொடர்பான புகாரை காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும் என நினைப்பீர்கள். உண்மை அதுவல்ல, காவல் நிலையத்தில் மட்டும்தான் புகாரை கொடுக்க வேண்டும் என்று சட்டமும் விதியும் சொல்லவில்லை.இருப்பினும் காவல் துறையில் புகாரை பதிவு செய்வது எப்படி என்பதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. காவல்நிலையத்திற்கு மட்டுமல்லாது நீங்கள் எந்த மனுவை யாருக்கு எழுதினாலும் சட்டப்பிரிவு போட்டு எழுதினால் நீங்க என்ன சொல்ல நினைக்கின்றீர்கள் என்பதை சட்ட […]
ஹாங்காங்கில் டீப் பேக் யுக்தியை பயன்படுத்தி ரூ.207 கோடி மோசடி
ஹாங்காங்கில் டீப் பேக் யுக்தியை பயன்படுத்தி ரூ.207 கோடி மோசடி டீப் பேக் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப மோசடி வாயிலாக, ஹாங்காங்கை சேர்ந்த நிறுவனம் 207 கோடி ரூபாயை இழந்துள்ளது. டீப் பேக் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப மோசடியை பயன்படுத்தி, பிரபலங்களின் முகத்தை வேறு நபர்களின் உடலுடன் பொருத்தி வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.இதன் அடுத்த கட்ட பாய்ச்சலாக, மிக பெரிய பொருளாதார குற்றங்களுக்கு இந்த டீப் பேக் தொழில் […]
மதுரையில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறித்தவர் கைது
மதுரையில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம் பறித்தவர் கைது மதுரை K. புதூரை சேர்ந்தவர் சங்கர் வயது (41) இவர் தல்லாகுளத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் கோகலே சாலையில் உள்ள கடையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது வந்த மூன்று பேர் கத்தியை காட்டி சங்கரை மிரட்டி அவரிடமிருந்து ரூ,1300 ரொக்கத்தை பறித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் […]
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மதுரை அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் கடந்த 08:9:2021 ல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் […]
தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி 2024 ஏப்ரல் 14 அன்று காலை 08.00 மணிக்கு நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காவல்துறை தலைமை இயக்குநர் / இயக்குநர் – தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை திரு.அபாஷ் குமார் இ.கா.ப, தீவிபத்து மற்றும் மீட்புப் பணிகளில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருமதி.மீனாட்சி விஐயகுமார் இணை இயக்குநர் வடமண்டலம், அலுவலர்கள் மற்றும் […]
ஆயுதங்களுடன் 3 பேர் கைது
ஆயுதங்களுடன் 3 பேர் கைது மதுரை எஸ்,எஸ், காலனி போலீசார் ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் பெரிய வாள் இருந்தது தெரிய வந்தது. ஆட்டோவில் வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் வயது (33) என்பதும் குற்ற செயல்களில் ஈடுபடுவதற்காக ஆயுதத்தைக் கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் எல்லீஸ் நகர் பாலத்தின் கீழ் பகுதியில் வாள் கத்தி போன்ற ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2 சிறுவர்களை போலீசார் கைது […]