Police Department News

மதுரை பாலம் ஸ்டேஷன் ரோட்டில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்

மதுரை பாலம் ஸ்டேஷன் ரோட்டில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் தற்பொழுது14/8/ 2025 தேதி முதல் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் இடதுபுறம் வேலை நடைபெற உள்ளதால் கபடி ரவுண்டானாவில் இருந்து எம் எம் லட்ஜ்க்கு செல்லும் வாகனங்கள் ஒரு சிறிய மாற்றமாக பாலம் ஸ்டேஷன் ரோட்டில் வலது புறம் புதிதாக ஏற்படுத்தியுள்ள சாலையில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது மேற்படி தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொள்கிறார்கள்.

Police Department News

தூய்மை இந்தியா இயக்கம் சார்பாக ரயில்வே பாதுகாப்பு படையினரின் விழிப்புணர்வு

தூய்மை இந்தியா இயக்கம் சார்பாக ரயில்வே பாதுகாப்பு படையினரின் விழிப்புணர்வு தூய்மை இந்தியா இயக்கம் என்பது இந்திய அரசாங்கத்தால் அக்டோபர் 2, 2014 அன்று தொடங்கப்பட்ட நாடு தழுவிய பிரச்சாரமாகும். இது தொடர்பாக. 12/0825 அன்று காலை 10.30 மணிக்கு, திருமதி. கார்த்திகை வேணி, சுகாதார ஆய்வாளர், இரயில்வே, மதுரை, மற்றும் 8 துப்புரவு ஊழியர்கள், இரா. பாலசுப்பிரமணியன், உதவி துணை ஆய்வாளர், இரயில்வே பாதுகாப்பு படை மதுரை, மற்றும் மா. ஆவுடையப்பன், உதவி துணை ஆய்வாளர் […]

Police Department News

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் விதி மீறி இயக்கிய ஆட்டோக்கள் பறிமுதல்

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் விதி மீறி இயக்கிய ஆட்டோக்கள் பறிமுதல் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக பலர் புகார் அளித்தனர் இதையடுத்துது போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் அவர்களின் தலைமையில் போக்குவரத்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர் விதி மீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 22 ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ., சித்ரா அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Police Department News

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு 11.08.2025 அன்று மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர காவல் சார்பாக, “போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” எடுத்துக்கொள்ளப்பட்டது . இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தெற்கு) காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Police Department News

மதுரையில் புதிதாக செயல்பட இருக்கும் அறிவுரை கழகம் (Advisory Board)திறப்பு விழா

மதுரையில் புதிதாக செயல்பட இருக்கும் அறிவுரை கழகம் (Advisory Board)திறப்பு விழா 11.08.2025, அன்று மதுரை ஆணையூர் கிழக்கு மண்டல அலுவலகத்தில் புதிதாக 20 மாவட்டங்கள் அடங்கிய காவல் நிலைய குண்டர் தடுப்பு வழக்குகளை விசாரணை செய்யும் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட இருக்கும் புதிய அறிவுரை கழகத்தின் (Advisory Board)அலுவலக திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினை சிறப்பித்தார்

Police Department News

மதுரை ரயில் நிலையத்தில் சென்னை செல்ல பயணச்சீட்டு பெற்றிருந்த காலில் அடிபட்ட பயணிக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவி

மதுரை ரயில் நிலையத்தில் சென்னை செல்ல பயணச்சீட்டு பெற்றிருந்த காலில் அடிபட்ட பயணிக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மீன் கடை தெருவை சேர்ந்த முத்துஇருளன் மகன் மாரிக்கண்ணு வயது 63, இவர் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக பயணச்சீட்டு பெற்றிருந்தார் இவர் தன் மனைவியுடன் நான்காவது பிளாட்பாரத்தில் சுமார் 6.40 மணியளவில் நடந்து செல்லும் சமயம் கால் இடறி கீழே விழுந்ததில் அவரது கால் மூட்டில் அடிபட்டு நடக்க […]

Police Department News

மதுரையில் போதைப் பொருளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமான விழிப்புணர்வு.

மதுரையில் போதைப் பொருளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமான விழிப்புணர்வு. 11.08.25 திங்கள் கிழமையன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது ஆணைக்கு இணங்க தமிழக முழுவதும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் களுக்கு போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஹோலி பேமிலி தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு […]

Police Department News

மதுரை ரயில் நிலையத்தில் பணிக்கு ரயிவே போலீஸார் மருத்துவ உதவி

மதுரை ரயில் நிலையத்தில் பணிக்கு ரயிவே போலீஸார் மருத்துவ உதவி இன்று 07.08.2025 அன்று, ரயில் எண் 16343, காலை 10.30 மணிக்கு நடைமேடை எண் 04 இல் வந்து சேர்ந்தது. அப்போது வெள்ளதுரை என்ற பயணி, வயது 55, த/பெ. சீனியப்பன் 2/172, மெயின் ரோடு, இனாம், கோவில்பட்டி, என்பவர் ஒட்டப்பாலத்திலிருந்து மதுரைக்கு பயணம் செய்தார், முன்பதிவு செய்யாத டிக்கெட் UMO எண் 68153898. திடிரென்று அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதால் மருத்துவ உதவியை நாடினார். […]

Police Department News

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறையினர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறையினர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் அலங்காநல்லூர் காவல் நிலையம் பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக அலங்காநல்லூர் காவல் நிலைய குற்ற எண்: 69/2019 U/s 147,148,394(b),323,324,355,307,302,506(ii),IPC and TNPHW Act வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 1) கமல் பாண்டி (49) வடுகப்பட்டி2) செல்வ பாண்டி […]

Police Department News

ரயில் பெட்டியில் போலீசார் சோதனை செய்தபோது கேட்பாரற்று கிடந்த பையில் 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை

ரயில் பெட்டியில் போலீசார் சோதனை செய்தபோது கேட்பாரற்று கிடந்த பையில் 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த புருலிய (மேற்குவங்காளம்) to திருநெல்வேலி வரை செல்லும் புருலிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் மருதராஜ், மணிமாறன், மதன்ராஜ் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர் முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை […]