திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராக சத்யபிரியா பொறுப்பேற்பு திருச்சி மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டு, 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராக எம்.சத்தியபிரியா பொறுப்பேற்றார். திருச்சி மாவட்ட காவல் துறையிலிருந்து மாநகர பகுதிகளைப் பிரித்து, திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தை உருவாக்கும் வகையில் 1.6.1997 அன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக மாநகரத்தின் முதல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரியான வடிவேலு 8.6.97 அன்று பொறுப்பேற்றார். 32-வது […]
Month: January 2023
டிஜிபி Dr.அபாஷ் குமார், IPS., தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் தலைவராக மாற்றப்பட்டார்
காவல் துறையில் ஒரு புதிய மாற்றத்தில், சிவில் சப்ளைஸ் சிஐடியின் தலைவராக இருந்த டிஜிபி Dr.அபாஷ் குமார்,IPS., வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டு, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
DGP Dr.Abhash Kumar,IPS., transferred to head of TN Fire and Rescue Services
In a fresh shuffle in the police department, DGP Dr.Abhash Kumar,IPS., who was heading Civil supplies CID, was on Friday transferred and posted as the new director of TN Fire and Rescue Services.
ரூ.4000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
ரூ.4000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது ரூ.4000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைதுதிருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தேவனூர் புதூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ராமையா மகன் செல்லதுரை. ராமையாவுக்கு தேவனூர் புதூர் கிராமத்தில் சுமார் 1.25 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ராமையா கடந்த பிப்ரவரி 2021 இல் இறந்து விடுகிறார். இவரது வாரிசுகளாக இவரது மனைவி அமுதா மகன்கள் செல்லதுரை, சுரேந்தர் மற்றும் சுபத்திரா என்ற மகளும் உள்ளனர்.மேற்படி […]
ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது
ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது மதுரை மாநகரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் நேற்று மாலை கிருதுமால் நதி அருகே ரோந்து சென்றனர். அப்போது சில்வர் பட்டறை எதிரே தண்டவாளம் அருகே […]
ரெயிலில் இருந்து தவறிவிழுந்து வடமாநில வாலிபர் சாவு
ரெயிலில் இருந்து தவறிவிழுந்து வடமாநில வாலிபர் சாவு மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்துகிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த வாலிபரின் முகம் மற்றும் உடலில் சிராய்ப்புகள் […]
மாயமான வாலிபர் காதலியுடன் சிக்கினார்
மாயமான வாலிபர் காதலியுடன் சிக்கினார் மதுரை கீழமுத்துபட்டடி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துபாண்டி மகன் சதீஷ்குமார் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீ சில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் சதீஷ்குமார், வீட்டுக்கு தெரியாமல் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததும், அவருடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததும் தெரிய வந்தது. […]
நர்சு உள்பட 2 பேரிடம் நகை பறித்த விருதுநகர் வாலிபர்
நர்சு உள்பட 2 பேரிடம் நகை பறித்த விருதுநகர் வாலிபர் மதுரை ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் அனிதா ஆரோக்கிய செல்வி. இவர் அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது தாய் நான்சி மற்றும் தோழி கீதாலட்சுமி ஆகியோருடன், பெரியார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள தேவாயலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு அவர்கள் டவுன்ஹால் ரோட்டில் மற்றொரு தேவா லயத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர். […]
சட்டம் சட்டப்பிரிவுகளுக்கு மரியாதை
சட்டம் சட்டப்பிரிவுகளுக்கு மரியாதை சாதாரணமாக நீங்கள் செய்வது குற்றம் என்று சொன்னாலும், அது குற்றமே எனத் தெரிந்தாலும் கூட, யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். அதே குற்றம் எனக்கூறும் சட்டத்தின் எண்ணைக் குறிப்பிட்டு சொல்லிப் பாருங்கள். நீதிபதி கூட பயப்படுவார். இதுதான் சட்டப் பிரிவுக்கு உள்ள மதிப்பு. இதுவரையிலும், விழிப்புணர்வு செய்பவர்கள் எல்லோருமே, சமுதாய விழிப்புணர்வைத்தான் செய்கிறார்களே ஒழிய, சட்ட விழிப்புணர்வைப் பற்றியோ, சட்டத்தை தவறாக கையாள்பவர்களைக் களைஎடுப்பது எப்படி? என்பது பற்றியோ கற்றுத்தரவும் இல்லை. கவலைப்படவும் இல்லை. […]
ஜல்லிக்கட்டு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
ஜல்லிக்கட்டு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு உலகப்புகழ்பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் இன்று அலங்காநல்லூர் வாடிவாசலை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது டி.எஸ்.பி பாலசுந்தரம், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் மற்றும் விழா குழுவினர், போலீசார் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், பார்வையாளர் கேலரி அமைப்பது, காளைகள் […]