தலைமறைவான ரவுடி கைது மதுரை சோலை அழகுபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மாயக்கண்ணன் என்ற மாயாண்டி. இவரது மகன் காசி மணி (வயது 23). இவர் மீது தெற்கு வாசல் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் ஆகிய 2 போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து தாக்குதல், பொது இடத்தில் ஆபாசமாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத்தொடர்ந்து காசிமணியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் […]
Month: January 2023
16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்
16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் மதுரை மாட்டுத்தாவணி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்ப வில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதில் தங்களது மகளை […]
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் இன்று போக்குவரத்துத்துறை சார்பாக அமைச்சர் முர்த்தி சாலை பாதுகாப்பு தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சாலை விபத்துகளை தவிர்த்திடும் நோக்கில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்பாராமல் நடக்கும் ஒரு சாலை விபத்தின் மூலம் எதிர்பாராத மருத்துவ செலவு, உயிரழப்பு, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகின்றது. […]
இன்று 14.01.2023 காலை 10.30 மணியளவில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பேற்றது.
இடம்: பெருங்குடி டோல்கேட், பெருங்குடி நடைமேடை, மற்றும் பெருங்குடி சென்னை வர்த்தக மையம் சிக்னல் அருகில்
இன்று 14.01.2023 காலை 10.30 மணியளவில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பேற்றது.இடம்: பெருங்குடி டோல்கேட், பெருங்குடி நடைமேடை, மற்றும் பெருங்குடி சென்னை வர்த்தக மையம் சிக்னல் அருகில் J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன், உதவி போக்குவரத்து ஆய்வாளர் திரு.மகேந்திரன்மற்றும் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் ,திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் Rotary community corps Blue waves ch tn. இணைந்து வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒவ்வொரு […]
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 கொள்ளையர்கள் கைது
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 கொள்ளையர்கள் கைது மதுரை மாநகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து ரவுடிகள் கொள்ளை யடிப்பதற்காக, ஆயுதங்களுடன் ஊடுருவி இருப்பதாக மாநகர போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இன்று அதிகாலை கீரைத்துறை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் 2 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினார்கள். […]
கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது மதுரை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கோவையில் இருந்து மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அதுபற்றி உடனே மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள், மதுரை வரும் கோவை ரெயிலில் சோதனை நடத்த […]
பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் மரணம்- பெற்றோரிடம் விசாரணை
பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் மரணம்- பெற்றோரிடம் விசாரணை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு திருணமாகி ஓராண்டு ஆகிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காளீஸ்வரி கடந்த 3-ந் தேதி பிரசவத்திற்காக உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்கள் 5-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10 […]
அதிவேகமாக வாகனம் ஓட்டிச்சென்ற கல்லூரி மாணவர்கள் கைது
அதிவேகமாக வாகனம் ஓட்டிச்சென்ற கல்லூரி மாணவர்கள் கைது மதுரை மாநகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களில் நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய 2 திரைப்படங்கள் நேற்று வெளியாகி உள்ளன. இதனை பார்ப்பதற்காக ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தியேட்டருக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சினிமா ரசிகர் மன்றங்களை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அதிவேகமாக செல்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் […]
பாப்பாரப்பட்டி அருகே பச்சிளம் குழந்தை உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை
பாப்பாரப்பட்டி அருகே பச்சிளம் குழந்தை உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பூதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 24). கோழி வியாபாரி. இவருக்கும் புவனேஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புவனேஸ்வரிக்கு பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 24-ந் தேதி முதலாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் புவனேஸ்வரி தனது பச்சிளம் குழந்தைக்கு பால் […]
பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செல்லும் வீராங்கனைக்கு பாராட்டு
பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செல்லும் வீராங்கனைக்கு பாராட்டு மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆஷா மால்வியா. மலையேற்றத்தில் தேசிய அளவில் சாதனை புரிந்த வீரங்கனையான இவர், பெண்களின் அதிகாரம் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி, கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூர விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தொடங்கினார். பல்வேறு மாநிலங்கள் வழியாக 7-வது மாநிலமாக தமிழகம் வந்த அவர் பல்வேறு மாவட்டங்களின் […]