தீயணைப்புத் துறை டூ ஐ.ஏ.எஸ் அதிகாரி.. ஃபீனிக்ஸ் மங்கையின் வெற்றிக்கதை! தீயணைப்புத் துறையின் முதல் பெண் அதிகாரியான பிரியா ரவிச்சந்திரன், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தீயணைப்புத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஒருவர் தேர்வு செய்யப்படுவதும் இதுவே முதல்முறை என்பது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. காவல்துறையில் பெண்கள் பலர் சாதித்த போதும் 2003ஆம் ஆண்டு வரை தீயணைப்புத் துறையில் பெண்கள் யாரும் சேரவில்லை. இந்த சூழலில் தான், தமிழ்நாடு அரசின் குரூப்-1 தேர்வில் வென்றதன் […]
Day: January 2, 2024
₹1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பன் எரித்துக் கொலை.. சினிமாவை விஞ்சும் அதிர்ச்சி சம்பவம்
₹1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பன் எரித்துக் கொலை.. சினிமாவை விஞ்சும் அதிர்ச்சி சம்பவம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த அல்லாணுார் பகுதியில், கடந்த செப்டம்பர் மாதம் ஒரு குடிசை வீடு முற்றிலும் தீயில் எரிந்தது. வீட்டிற்குள் உடல் கருகி இறந்த நிலையில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உடற்கூறாய்வில் அந்த நபர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, உடலில் தீ வைத்து எரித்து இருப்பது தெரியவந்தது. கொலை சம்பவத்தில் தொடர்புசெடைய சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், […]
விமானத்தில் சென்று கஞ்சா பிஸினஸ்… ‘காஸ்ட்லி’ போதை வியாபாரிகள் சிக்கியது எப்படி?
விமானத்தில் சென்று கஞ்சா பிஸினஸ்… ‘காஸ்ட்லி’ போதை வியாபாரிகள் சிக்கியது எப்படி? சென்னையில் இருந்து திரிபுராவுக்கு விமானத்தில் சென்று கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த இருவர் போலீசில் சிக்கியுள்ளனர். சென்னை தரமணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து தரமணி உதவி ஆணையாளர் அமீர் அஹமது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சென்னை தரமணி ரயில் நிலையம் அருகில், […]
புறம்போக்கு நிலத்திற்காக அடிதடி… கட்டட தொழிலாளி படுகொலை.. திண்டுக்கல்லில் பயங்கரம்…!
புறம்போக்கு நிலத்திற்காக அடிதடி… கட்டட தொழிலாளி படுகொலை.. திண்டுக்கல்லில் பயங்கரம்…! திண்டுக்கல் அருகே புறம்போக்கு நிலத்தை யார் பயன்படுத்துவது என்ற முன்விரோதத்தில் சித்திக்கு ஆதரவாக இருந்த கட்டிடத் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள வன்னிய பாறைப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பெரியசாமி. சில மாதங்களுக்கு முன்னர் பெரியசாமியின் சித்தி மருதாயி என்பவருக்கும், அவரது எதிர் வீட்டில் வசிக்கும் செந்தில்குமார் என்பவருக்கும் புறம்போக்கு […]
அமோனியா வாயுக்கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பசுமை தீர்ப்பாயம்
அமோனியா வாயுக்கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பசுமை தீர்ப்பாயம் சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு கப்பல் மூலம் திரவ அமோனியா எடுத்துவர ஏதுவாக கடலில் இருந்து தொழிற்சாலைவரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் இருந்து கடந்த 27-ந் தேதி திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. வாயுக்கசிவால் ஏராளமான […]
சிதம்பரம் அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்
சிதம்பரம் அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம் சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சி, பாலுதாங்கரை பகுதியில் வசிக்கும் தமிழ் இலக்கியா என்பவர், வழக்கம்போல் காலையில் உணவு தயாரிக்க, வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது ரெகுலேட்டரில் தீப்பற்றியுள்ளது. சாக்கை எடுத்து தீயை அணைக்க முயன்றபோது தீ அதிகம் பரவியுள்ளது. இதையடுத்து தமிழ் இலக்கியா, அவரது மகன், மாமனார், மாமியார் ஆகியோர் வீட்டைவிட்டு அவசரமாக வெளியேறினர். சிறிது நேரத்தில் […]