Police Department News

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 09.04.2025 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 09.04.2025 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிபேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்களின் தலைமையில் வாராந்திர குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 41 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC), துணைக் காவல் கண்காணிப்பாளர்திரு.ரமேஷ் ராஜ் (DCB) […]

Police Department News

மதுரையில் கன மழையின் காரணமாக பாதிப்படைந்த ரோட்டை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சரி செய்த போக்குவரத்து காவலர்கள்

மதுரையில் கன மழையின் காரணமாக பாதிப்படைந்த ரோட்டை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சரி செய்த போக்குவரத்து காவலர்கள் மதுரையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணத்தால்மதுரை வைகை வடக்கு படுகை ரோடு பாதிப்படைந்தது இதனால் போக்குவரத்தில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்பட்டனர் இதனால் மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபனா அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பாதிப்படைந்த ரோட்டை சரி செய்து வாகன ஓட்டிகள் சிரமமின்றி வாகனங்களை இயக்க உதவினர்

Police Department News

சிவகிரியில் காரில் கஞ்சா கடத்திய பிரபல கஞ்சா ரவுடி கார்த்திக் அதிரடி கைது.

சிவகிரியில் காரில் கஞ்சா கடத்திய பிரபல கஞ்சா ரவுடி கார்த்திக் அதிரடி கைது. தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் உத்தரவிட்டதை அடுத்து புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன் அவர்கள் மேற்பார்வையில் சிவகிரி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் சார்பு ஆய்வாளர் வரதராஜன் மற்றும் போலீஸார் சகிதம் தென்காசி To மதுரை ரோட்டில் வாகன தணிக்கைசெய்தனர் அப்போது அந்த வழியாக […]

Police Department News

மதுரை கருமாத்தூரை சேர்ந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது.

மதுரை கருமாத்தூரை சேர்ந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது. மதுரை கருமாத்தூர் பகுதியை சேர்ந்த போஸ் தேவர் மகன் ஜெயபிரபு வயது 52 இவர் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளின் மூலம் போலீஸ் காரின் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார் இவரது தொடர் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக 7/4/25 ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின்படி இவரை குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

Police Department News

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 03 நபர்களில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தல ரூ.50,000/- அபராதமும் மற்றொரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.65,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 03 நபர்களில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தல ரூ.50,000/- அபராதமும் மற்றொரு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 05 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.65,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021- ஆம் ஆண்டு ராஜபாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (எ) சிக்கனம்பட்டி ராஜா(59), […]

Police Department News

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 06 நபர்களுக்கு 12 ஆண்டுகள் 03 மாத சிறை தண்டனை மற்றும் தல ரூ.12,500/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு குற்றப்பிரிவு காவல்துறையினர்

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 06 நபர்களுக்கு 12 ஆண்டுகள் 03 மாத சிறை தண்டனை மற்றும் தல ரூ.12,500/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு குற்றப்பிரிவு காவல்துறையினர் 08.04.2025 திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016- ஆம் ஆண்டு அழகேந்திரன் என்பவர் தங்களுடைய இடத்தை வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மல்லம்மாள்(62) திம்மையன்(65) திண்டுக்கல் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜு(41), கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(60) […]

Police Department News

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய தேனி மாவட்ட பெண் தலைமை காவலர்

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய தேனி மாவட்ட பெண் தலைமை காவலர் 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியில் (INSAS 300 YARDS) பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தேனி மாவட்ட பெண் தலைமை காவலர் திருமதி P.பிரியா அவர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Police Department News

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கொலை முயற்சி வழக்கில் தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் நீதிமன்றத்தில் கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்லை குற்ற எண் 315/2023, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய கூடலூர் வடக்கு காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Police Department News

இந்திய குதிரைப்படை காவல் துறையினருக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

இந்திய குதிரைப்படை காவல் துறையினருக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற 43வது அகில இந்திய காவல் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரைப்படை காவல் துறையினருக்கான போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற, சென்னை பெருநகர காவல் குதிரைப்படையைச் சேர்ந்தவர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.

Police Department News

ராணிபேட்டை மாவட்டத்தில் கவாத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி

ராணிபேட்டை மாவட்டத்தில் கவாத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி வாராந்திர கவாத்து பயிற்சியில் கைதுப்பாக்கி, Gasgun , Grenades, கையாளும் விதம் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது இன்று (05.04.2025) இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி (Pistol) கையாளும் விதம் பற்றிய வகுப்புகளும் மற்றும் Gasgun, Grenades கையாளும் விதம் பற்றிய வகுப்புகள் எடுத்துரைக்கப்பட்டது. இதில் கூடுதல் காவல் […]