மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்..! 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மாநகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக 500-க்கும் மேற்பட்ட மாநகராட்சி அனைத்து பிரிவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் ஆகியவை கலந்து கொண்டன. […]