Police Department News

கூலி தொழிலாளி உள்பட 2 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது

கூலி தொழிலாளி உள்பட 2 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது மதுரை பாலரெங்கா புரத்தை சேர்ந்த கண்ணன் மகன் சிவகார்த்திகேயன் (வயது 19). இவர் முத்துப்பட்டி, பெருமாள் நகரில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். அங்கு வந்த 5 பேர் கும்பல் அவரிடம் கஞ்சா கேட்டு மிரட்டியது. இதற்கு சிவகார்த்திகேயன் மறுத்து விட்டார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை, பீர்பாட்டிலால் தாக்கியது. இது குறித்து சிவகார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை […]

Police Department News

சொத்து பிரச்சினை: சகோதரியின் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர்

சொத்து பிரச்சினை: சகோதரியின் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் திருமங்கலம் அருகே உள்ள திரளியை சேர்ந்த அசோக் குமாரின் மனைவி சத்யா(வயது36), இவருடைய அண்ணன் சந்தோஷ் குமார்(39) புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார். சத்யா குடியிருந்த வீட்டை அவரது தந்தை அவருக்கே எழுதி கொடுத்து விட்டார். இதனால் அண்ணன், தங்கைக்கு சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சந்தோஷ்குமார் நேற்று சத்யா வீட்டுக்கு வந்தார். சொத்து பிரச்சினை காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தோஷ்குமார், சத்யா வீட்டுக்குள் […]

Police Department News

கோவிலில் புகுந்து வேல் திருடியவர் கைது

கோவிலில் புகுந்து வேல் திருடியவர் கைது மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னரெட்டிபட்டியை சேர்ந்தவர் மகாதேவன்(37). இவர் சென்னையில் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார். வருடம் தோறும் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து பாத யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டு மாலை அணிந்து பாதயாத்திரை செல்வதற்காக 15 தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். மேலும் பழனி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ரூ. 1,500 மதிப்புள்ள பித்தளை வேல் வாங்கி சின்னா ரெட்டிபட்டியில் […]

Police Department News

காவல்நிலையத்தில் CSR பெற என்ன செய்ய வேண்டும்?

காவல்நிலையத்தில் CSR பெற என்ன செய்ய வேண்டும்? காவல்துறையினர் வழங்குகின்ற ஒப்புதல் சீட்டே புகார் மனு ஏற்புச் சான்றிதழ் : இந்திய தண்டணைச் சட்டங்களிலுள்ள IPC (சில) பிரிவுகளின்படி தண்டிப்பதற்கான குற்றம் ஏதாவது நடந்து இருந்தாலும், அல்லது நடக்கப் போவதை அறிந்தாலும் பொதுமக்களாகிய நாம் போலீஸ் ( Police ) ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், ( CrPC ) பிரிவு 39-ல் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களாகிய நாம் […]

Police Department News

கள்ளக் காதலால் காதை இழந்த மூதாட்டி – உயிர் ஊசலாடி வருகிறது.

கள்ளக் காதலால் காதை இழந்த மூதாட்டி – உயிர் ஊசலாடி வருகிறது. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கங்கப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன் இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது.52) இவர் கடந்த 27ஆம் தேதி அன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை, இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் ஜெயலட்சுமி மயங்கி நிலையில் கிடந்தார்,அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி […]

Police Department News

மாரண்டஅள்ளி அருகே பள்ளி மாணவன் மாயம்!

மாரண்டஅள்ளி அருகே பள்ளி மாணவன் மாயம்! தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பி. செட்டி அள்ளியை பகுதியோ சேர்ந்தவர் மாதப்பன் மகன் நித்தீஷ் 15 வயது அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறான். சரியாக படிக்காமல் இருந்துள்ளான். தற்போது பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளான். இந்த நிலையில் பெற்றோர் அவனை படிக்கும்படி கூறியுள்ளனர். இதனால் கோபித் துக்கொண்டு கடந்த 29ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய நித்தீஷ் மீண்டும் திரும்பவில்லை பல்வேறு […]

Police Department News

பொதுமக்களிடம் தோழமையோடு பேசி தீர்வு காண்பதில் தன்னை முதன்மைபடுத்திவரும் காவல் உதவி ஆய்வாளர்

பொதுமக்களிடம் தோழமையோடு பேசி தீர்வு காண்பதில் தன்னை முதன்மைபடுத்திவரும் காவல் உதவி ஆய்வாளர் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பல்வேறு மாவட்டத்தில் பணியாற்றி தற்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் திரு. அசோக்குமார் அவர்கள் தன்னை தேடிவரும் பொதுமக்களுக்கு மனதளவில் ரிலாக்ஸ் ஆக நட்பு ரீதியான பக்குவம் ஏற்படும் வகையில் தோழமையோடு பேசி தீர்வு காண்கிறார். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

Police Department News

திருமங்கலம் ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் பணம் திருடியவர் கைது

திருமங்கலம் ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் பணம் திருடியவர் கைது திருமங்கலத்தை அடுத்துள்ள காண்டை கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி மனைவி முத்தீசுவரி(வயது 32). இவர் கடந்த அக்டோபர் 10-ந்தேதி திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம். பணம் எடுக்க சென்றார். இவருக்கு பின்னால் நின்ற மர்மநபர் முத்தீசுவரியிடம் நைசாக பேசி தான் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கி எந்திரத்தில் சொருகினார். பணம் வரவில்லை என்று கூறி தன்னிடம் இருந்த மற்றொரு கார்டை முத்தீசுவரிடம் […]

Police Department News

புத்தாண்டு கொண்டாடி விட்டு திரும்பிய வாலிபர் விபத்தில் பலி

புத்தாண்டு கொண்டாடி விட்டு திரும்பிய வாலிபர் விபத்தில் பலி திருமங்கலம் கீழபள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் மைதீன். இவரது மகன் முகமது முஷபர் கனி(23). நேற்று இவர் நண்பர்களுடன் திருமங்கலத்தை அடுத்துள்ள மறவன்குளத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட் டத்தில் பங்கேற்றார். கொண்டாடத்தை முடித்துவிட்டு நள்ளிரவு 2.30 மணியளவில் அவரது நண்பர் அலெக்ஸ் பாண்டியுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையம் அருகே மின்வாரிய பஸ்நிறுத்தம் அருகில் உள்ள வளைவில் வந்த போது […]

Police Department News

எதிரிகளை அச்சுறுத்த துப்பாக்கி வைத்திருந்த ரவுடி

எதிரிகளை அச்சுறுத்த துப்பாக்கி வைத்திருந்த ரவுடி மதுரை கீழஅண்ணா தோப்பை சேர்ந்தவர் அலெக்ஸ் என்ற பெரிய அலெக்ஸ் (வயது 38). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அவர் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அலெக்ஸ் வீட்டில் கைத்துப்பாக்கி இருப்பதாக திலகர்திடல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அவரது வீட்டில் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு […]