Police Department News

தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் திருட்டு

தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் திருட்டு மதுரை கோமதிபுரம் சன் ஸ்டார் தெருவை சேர்ந்தவர் சஞ்சய்குமார்(வயது56), தொழிலதிபர். இவர் திடீர்நகர் பகுதியில் பச்சை நாச்சியம்மன் தெருவில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் ஊழியராக வேலை பார்த்து பார்ப்பவர் ஜிஜேந்தர்(34). இவர் சம்பவத்தன்று டீயில் போதை மருந்து கலந்து முதலாளி சஞ்சய்குமாரிடம் கொடுத்துள்ளார். டீயை குடித்ததும் சஞ்சய்குமார் மயங்கி விட்டார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஜிஜேந்தர் திருடி விட்டு தப்பிச்சென்று விட்டார். இதுபற்றி சஞ்சய்குமார் திடீர் நகர் […]

Police Department News

திருச்சி மாநகர காவல்துறைக்கு புதிய மோப்ப நாய் சேர்ப்பு

திருச்சி மாநகர காவல்துறைக்கு புதிய மோப்ப நாய் சேர்ப்பு திருச்சி மாநகர காவல் ஆணையராக எம்.சத்தியப்பிரியா, இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கவும், திருச்சி மாநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்கவும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்கியுள்ளனர். திருச்சி மாநகர காவல்துறைக்கு புதியதாக Labrador Retriever என்ற […]

Police Department News

காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் அன்றாட தேவைகளுக்காக இரண்டு சக்கரவாகனத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம்:- காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் அன்றாட தேவைகளுக்காக இரண்டு சக்கரவாகனத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது. அந்த தேவைகளை இன்றைய சமுதாய தலைமுறையினர் சர்வ சாதாரணமாக நினைத்து வாகனங்களை மின்னல் வேகத்தில் இயக்கிகொண்டும் பல துயரங்களையும் சந்தித்து வருகின்றனர். அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்களான திரு.செல்லதுரை மற்றும் திரு.முருகன் ஆகியோர் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது வாகன ஓட்டிகள் பலரும் தலைகவசம் அணியாமலும் அதில் சிலர் அதிவேகத்தில் வாகனம் செலுத்துவதையும் தடுத்து நிறுத்தியும் அபராதம் அளித்தும் […]

Police Department News

பாலக்கோட்டில் மின் கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததில் ஒயர்மேன் பலத்த காயம் .

பாலக்கோட்டில் மின் கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததில் ஒயர்மேன் பலத்த காயம் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (50) இவர் பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வருகிறார்.இன்று காலை இவர் கல்கூடபட்டி பகுதியில் பழைய மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்த பலத்த காயம் ஏற்பட்டது. சகஊழியர்கள் மற்றும் அக்கம் […]

Police Department News

காரிமங்கலம் அருகே காரில் கடத்தப்பட்ட பெண் 5 மணி நேரத்தில் மீட்பு 4 பேர் அதிரடி கைது

காரிமங்கலம் அருகே காரில் கடத்தப்பட்ட பெண் 5 மணி நேரத்தில் மீட்பு 4 பேர் அதிரடி கைது தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காரில் கடத்தப்பட்ட பெண்ணை 5 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். மேலும் அவரை கடத்திய 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தாய், மகன் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த பெரியாம்பட்டி அருகே உள்ள ராமண்ணன்கொட்டாயை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 50). இந்த தம்பதிக்கு முத்து என்ற மகன் […]

Police Department News

மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின்

மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் தமிழகத்தில் மதுரை உள்பட 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. அங்கு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மதுரை கரிமேடு பகுதியில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 1850 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை பாதுகாக்கும் பணியில் 500-க்கும் மேற்பட்ட சிறைத்துறை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மத்திய ஜெயிலில் கைதிகள் மற்றும் உடைமைகளை […]

Police Department News

ஆன்லைன் ரம்மி விளையாடிய ஓட்டல் தொழிலாளி தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாடிய ஓட்டல் தொழிலாளி தற்கொலை சேலம் மாவட்டம் முல்லை காட்டை சேர்ந்தவர் குணசீலன்(வயது26). இவரது தம்பி பசுபதி. இவர்கள் மதுரை மாவட்டம் சாத்த மங்கலத்தில் வீடு எடுத்து தங்கியிருந்து தாலுகா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஓட்டலில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். அவர்கள் கடந்த 6 மாதங்களாக ஓட்டலுக்கு சென்று வேலை பார்த்து வந்தனர். அப்போது குணசீலனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் அவர் தினமும் ஆன்லைன் ரம்மி […]

Police Department News

மறியலில் ஈடுபட முயன்ற ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குண்டு கட்டாக கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் பத்தரகாளியம்மன் கோவில் பிரச்சனையில் மறியலில் ஈடுபட முயன்ற ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குண்டு கட்டாக கைது செய்யபட்டு போலீசார் குவிப்பு அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அந்த கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சனை காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக கோவில் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நேற்று அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் […]

Police Department News

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் சோதனை சாவடி திறப்பு

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் சோதனை சாவடி திறப்பு மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் சார்பில் அச்சம் பத்து நான்கு வழி சாலையில் 24X7 சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்க கூடிய சோதனை சாவடி நாளை 06.02.2023 திங்கட்கிழமை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் திரு. R. சிவபிரசாத் IPS அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைக்கிறார். உடன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. R. பாலசுந்தரம் B.Sc, […]

Police Department News

காதல் மனைவியை கொலை செய்த கணவர் பரபரப்பு வாக்குமூலம்

காதல் மனைவியை கொலை செய்த கணவர் பரபரப்பு வாக்குமூலம் மதுரை தெற்கு வெளி வீதி, சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மகள் வர்ஷா (வயது19). இவர் நேற்று மதியம் சப்பாணி கோவில் தெருவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் வர்ஷாவுடன் தகராறு செய்து அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார். இதில் உயிருக்கு போராடிய வர்ஷாவை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். […]