Police Department News

பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ்

பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாந்தி சுந்தரி (வயது 56).இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். சாந்திசுந்தரி பல மணி நேரம் கூட்ட நெரிசலில் வரிசையில் காத்திருந்தார். அப்போது சாந்தி சுந்தரி கையில் வைத்திருந்த கைப்பையை மர்ம நபர் திருடி கொண்டு தப்பினார். அதில் 10 பவுன் இருந்தது. […]

Police Department News

மல்லுப்பட்டி மாரியம்மன் கோவிலில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரகம் திருட்டு.
பூசாரி உட்பட6 பேர் மீது வழக்குப்பதிவு.

மல்லுப்பட்டி மாரியம்மன் கோவிலில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரகம் திருட்டு.பூசாரி உட்பட6 பேர் மீது வழக்குப்பதிவு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் சின்னமுனியன் (வயது .70)கோவிலுக்கு சொந்தமான 40 ஆண்டு பழமை வாய்ந்த கரகம் திடிரென காணாமல் போனதால் கோவில் பூசாரியின் மீது கோவில் தர்மகர்த்தா சுதர்சனன் மகேந்திரமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தார், போலீசார் நடத்திய விசாரனையில் பூசாரி மற்றும் அதே பகுதியை சேர்ந்த தேவி (வயது.30) […]

Police Department News

மதுரையில் தீப்பற்றி எரிந்த வேன்

மதுரையில் தீப்பற்றி எரிந்த வேன் மதுரை மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தாயார் ஜெயாவுடன் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ஆம்னி வேனில் புறப்பட்டு சென்றார். அவர்கள் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். 3 மாவடி அய்யர் பங்களா அருகே, வேன் வந்தபோது அதில் இருந்து திடீரென குபுகுபுவன கரும்புகை வெளிவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷாந்த், தாய் ஜெயாவுடன் வேனில் இருந்து கீழே இறங்கி விட்டார். இதைத்தொடர்ந்து வேன் தீப்பற்றி எரிந்தது. […]

Police Recruitment

இந்திய சாட்சிய சட்டம் 1872 Sec 70

இந்திய சாட்சிய சட்டம் 1872 Sec 70 ஒரு நபர், ஒரு xerox காப்பி மீது, தானாகவே, இது அசல் என்று சான்றிதழ் என்று சான்றொப்பம் செய்யலாம். அது சட்டப்படி ஏற்புடையது.உதாரணம், ஜாதி சான்றிதழில், நகலில், இது அசல் என்று எந்த அரசு அலுவலர், நோட்டரி பப்ளிக் கையெழுத்து இல்லாமல், அவரே, அசல் என்று சான்றொப்பம் செய்யலாம். சட்டப்படி இது செல்லும். Self attestation is lawful under Indian Evidence Act 1872 Sec 70.Section […]

Police Department News

FIRக்கு எஸ்பி அனுமதி தேவையில்லை.. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு

FIRக்கு எஸ்பி அனுமதி தேவையில்லை.. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு கடத்தல் விவகாரங்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய எஸ்.பி-க்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். பதற்றமான விவகாரங்களில் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கடத்தல் விவகாரங்களில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்வதற்கு எஸ்.பி-க்களின் அனுமதி தேவையில்லை. இக்கட்டான சூழ்நிலைகளில் காவல்துறையே விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு […]

Police Department News

பாலிஷ் செய்து தருவதாக கூறி பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்

பாலிஷ் செய்து தருவதாக கூறி பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கூழாண்டிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அன்ன மயில் (வயது 70). இவர் தனது மகன் வீரமணியுடன் வசித்து வருகிறார். நேற்று காலை அன்னமயில் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் அன்னமயிலிடம் தாங்கள் நகையை பாலிஷ் செய்து கொடுக்கும் தொழில் செய்து […]

Police Department News

கட்டிட காண்டிராக்டரிடம் பணம்-செல்போன்கள் திருட்டு

கட்டிட காண்டிராக்டரிடம் பணம்-செல்போன்கள் திருட்டு சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சக்தி சிவராஜ் (வயது 36). கட்டிட கான்ட்ராக்டரான இவர் மதுரை துவரிமான் மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கி, நாகமலை புதுக்கோட்டையில் திருமண மண்டபம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தி தங்க வைத்து இருந்தார். இந்த நிலையில் சக்தி சிவராஜ் சம்பவத்தன்று இரவு அறையில் படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, […]

Police Department News

மதுரையில் தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை

மதுரையில் தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை மதுரை கரிமேடு நடராஜ்நகர் மல்லிகை தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 72). இவரது மகன் உமாசங்கர் (46). இவர் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அனிதா பிரிந்து சென்று விட்டார். இதனால் உமாசங்கர் தேனியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரும் […]