விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பிடிபட்டது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீனிவாச பெருமாள் M.A..MBA அவர்கள் புகையிலை, குட்கா, பான் மசாலா ஆகிய பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து செய்து கண்காணிக்க உத்தரவிட்டதன் பேரில் நேற்று 23.12.2023 தேதி திருச்சுழி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களது தனிப்படையினருக்கு கர்நாடகா மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி எம் […]
Day: December 24, 2023
பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி
பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி காவல் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி வழங்கிய நிகழ்ச்சி சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் நடைபெற்றது. காவலர் ராம்குமார் சென்னையில் பணியாற்றியபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். இதேபோல், மதுரையைச் சேர்ந்த காவலர் கணபதி என்பவர் ஜூலை மாதம் சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவர்களின் குடும்பத்தினருக்கு 2009-ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் […]
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் இன்று (டிச.23) நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் இன்று (டிச.23) ஆலோசனை […]
பொன்னேரி அருகே திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை
பொன்னேரி அருகே திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை பொன்னேரி அருகே சிறுவாக்கம், சானார் பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பழனி மகன் முரளிகிருஷ்ணன் (24). விவசாயி. இவருக்கும் சோழவரம், ஜெகநாதபுரத்தை சேர்ந்த சேகர் மகள் தனலட்சுமி (20) என்பவருக்கும் கடந்த ஜனவரி 27ம் தேதி திருமணம் நடைபெற்றது. கடந்த 3 மாதங்களுக்கு முன் தனலட்சுமிக்கு கர்ப்பத்தை கலைந்துவிட்டது. இதனால் கணவர், மாமியார், மைத்துனர் ஆகிய 3 பேரும் தகாத வார்த்தைகளில் திட்டி வந்துள்ளனர். மேலும், […]
தொழிலாளி அடித்து கொலை 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
தொழிலாளி அடித்து கொலை 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை பண்ருட்டி அருகே தொழிலாளியை அடித்து கொலை செய்த வழக்கில், இரண்டு வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்குப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43). தொழிலாளியான இவர் கடந்த மே மாதம் 17ம் தேதி அதே பகுதியில் உள்ள அய்யனார் கோயில் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கூலி தொழிலாளி ஒருவர், ஏரியில் கை கால்களை கழுவ […]
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்! திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இரண்டு ஆண் பயணிகளை சோதனை செய்த போது இருவரும் தங்கத்தை பேஸ்ட் வடிவில் உருக்கி தங்களுடைய உள்ளாடையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. […]
தஞ்சாவூர் நாகநாதர் கோயிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
தஞ்சாவூர் நாகநாதர் கோயிலில் ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது தஞ்சாவூர் நாகநாதர் கோயிலில் 12 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள், வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர்.தஞ்சாவூரை அடுத்த பூக்குளம் பகுதியில் பழைய திருவையாறு சாலையில் 400 ஆண்டு பழமை வாய்ந்த வேதவள்ளி சமேத நாகநாதர் கோயிலில் கடந்த 17ம்தேதி நள்ளிரவு நடராஜர் உட்பட 12 ஐம்பொன் சாமிசிலைகள் மற்றும் சாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த 9 கிராம் […]
உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் அரசு இழப்பீட்டு தொகை வழங்கவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே செம்மார் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்(30). இவர் கடந்த 2019ம் […]
மதுரை சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மீண்டும் கைது
மதுரை சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மீண்டும் கைது கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற, தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் 29-ம் தேதி சிறை வளாகத்தில் தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென அங்கிருந்து தப்பிச் சென்றார். இது தொடர்பாக சிறைத் துறை நிர்வாகம் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜெயக்குமாரைத் தேடிவந்தனர். இதற்கிடையே, மத்திய சிறைக் […]