மதுரை மதிச்சியம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை மதிச்சியம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனங்கல் சாலையில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விதிமீறல்களில் ஈடுபடாமல் ஆட்டோ ஓட்டுமாறு அறிவுரை வழங்கப்பட்டதுடன் போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபனா, சார்பு ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவலர்கள் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் விதிமீறலில் ஈடுபட்ட ஏறத்தாழ 58 ஆட்டோ ஓட்டுனர்ளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.