சென்னையில் இன்று ஒரேநாளில் 5 ரவுடிகள் சரணடைந்துள்ளனர். ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டபோது கைப்பற்றப்பட்ட 88 செல்ஃபோன் எண்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் ரவுடிகளின் ரகசிய இருப்பிடங்கள், தொடர்புகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் ரவுடிகளை கைது செய்ய போலீசார் நெருங்கத் தொடங்கிய நிலையில் ரவுடி பினு, அவனது எதிர்த் தரப்பு ரவுடியான அரும்பாக்கம் ராதா மட்டுமன்றி இரு தரப்பு ரவுடிகள் பலரும் சரணடைந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இன்றுமட்டும் […]
Month: February 2018
கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் பணியிட மாற்றம் : DGP உத்தரவு
ஆய்வாளர் பெரியபாண்டியன் மீதான துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தொடர்புடைய கொளத்தூர் ஆய்வாளர் முனி சேகரை பணியிடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையின் போது ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். அப்போது கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர்தான் தவறுதலாக பெரியபாண்டியனை சுட்டது தெரியவந்தது. இது தொடர்பாக முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்கு உள்ளது. இதனிடையே சில நாட்கள் விடுப்புக்குப் பின் முனிசேகர் கொளத்தூர் ஆய்வாளராகவே பணியில் தொடர்ந்து வந்தார். இந்நிலையில் கொளத்தூர் ஆய்வாளராக இருந்த […]
திருமணமான முன்னாள் காதலியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது
திருமணமான முன்னாள் காதலியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஆந்திரமாநிலம் சித்தூரில் கைது செய்யப்பட்டார். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரி படிக்கும் போது கிரிம்ஸ்பேட் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞரை காதலித்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த பெண்ணுக்கு சித்தூரைச் சேர்ந்த பவன்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர் காதலிக்கும் போது தன்னுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்து மிரட்டிய பிரகாஷ் அந்த பெண்ணை, பலாத்காரம் செய்ததாக […]
தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையின் முக்கிய அதிகாரிகள் மாற்றம்
தமிழகம் முழுதும் சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற காவல் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதில் சென்னையின் தெற்கு மண்டல இணை ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல இணை ஆணையர் மனோகரன் உள்ளிட்டோர் மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்த விவரம்: சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் டி.அன்பு சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற போக்குவரத்து கிழக்கு […]
சீருடைக்கு அளவு எடுப்பதாகக் கூறி மாணவியை நிர்வாணப்படுத்திய ஆசிரியர் கைது
சீருடைக்கு அளவு எடுப்பதாகக் கூறி 8-ம் வகுப்பு மாணவியை நிர்வாணப்படுத்திய ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் கனூஜ் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவியை, அவரது ஆசிரியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இது குறித்து மாணவியின் தந்தை, “எனது மகள் கனூஜ் அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவருகிறார். என் மகளுக்கு சீருடைக்கு அளவு […]
திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
திருவள்ளூர் அருகே குன்னத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை சுஜாதா, நேற்று முன்தினம் மதியம் 3.30 மணியளவில், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குள் வந்தார். சுஜாதா அவரை விசாரித் துள்ளார். ‘‘நான் தொடக்க கல்வி அலுவலரை சந்தித்துவிட்டு வந்துள்ளேன். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமான குறும்படத்தை திரையிட்டுக் காட்ட விரும்புகிறேன். மாணவர்களுக்கு குறும்படம் திரையிட்டு காட்ட உரிய தேதி, நேரம் ஒதுக்கித் தாருங்கள்’’ என கேட்டுள் […]
ஓசூர் வனப்பகுதியில் பறக்க விடப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டு கிளிகள்
ஆஸ்திரேலிய நாட்டில் அழிந்து வரும் இனமான பச்சைக் கிளிகள் இனப்பெருக்கத்திற்காக, ஒசூர் அருகேயுள்ள அய்யூர் வனப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது 11 கிளிகள் மட்டுமே பறக்கவிடப்பட்டுள்ள நிலையில், ஒசூர் வனப்பகுதியின் சூழலை தாங்கி பல்கிப் பெருகினால் தொடர்ந்து கிளிகளை அதிக எண்ணிக்கையில் விட வனத்துறை முடிவு செய்துள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.டி. பெண் ஊழியரிடம் காவல் ஆணையர் நலம் விசாரிப்பு: தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி
கொள்ளையர்களின் தாக்குதலால் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.டி. பெண் ஊழியரை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சென்னை அருகே நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருபவர் லாவண்யா ஜனத் (30). ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். இவர் பணி முடிந்து கடந்த 13-ம் தேதி இரவு தனியாக தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். பெரும்பாக்கம் – தாழம்பூர் சாலையில் […]
பெண் கொலை வழக்கில் பாஜக பிரமுகர் கைது
தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்போரூர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அப்புமுருகன்(26) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் துளசி(35). இவருக்கும் திருப்போரூரை அடுத்த செட்டிபுண்ணியம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருத்துவேறு பாடு காரணமாக கணவர் செல்வத்தை துளசி பிரிந்து சென்று, பெருங்களத்தூர் […]
நாமக்கல் மாவட்டம் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் & போலீஸ் இ நியூஸ் சார்பில்
குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்குரூ5000 கற்கும் இரண்டு havells fan நன்கொடை யாக வழங்கப்பட்டது மாவட்டத் தலைவர் டாக்டர் கே.சிவக்குமார் வழங்க பள்ளி யின் தலைமை ஆசிரியை பெற்றுக்கொள்ள உடன் ரிப்போர்ட் ட்ராக இணைய உள்ள டாக்டர் ஜெர்மன்.சண்முகசுந்தரம் மற்றும் எஸ்.சரவணன்