Police Department News

திருவள்ளூர் அருகே வீட்டில் 2 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கல்

திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆரம்பாக்கம்  அருகேயுள்ள பெரியநத்தம்காலணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆந்திராவில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை மேற்கொண்ட  போது ரெங்கநாதன் என்பவரது வீட்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார் ரெங்கநாதன் மற்றும் அவரது மகன் தங்கராஜை […]

Police Department News

ஓட்டல் அறையில் பதுக்கப்பட்டிருந்த 1,300 மதுபாட்டில்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வெள்ளேரியில், ஓட்டல் அறையில் பதுக்கி வைத்திருந்த 1300 போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்களை சப்ளை செய்த செஞ்சியைச் சேர்ந்த குமார் என்பவர் தலைமறைவான நிலையில் சையத் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த ஓட்டலில் இருந்து இந்த மதுபாட்டில்களை ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்களைக் கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.