திண்டுக்கல் மாவட்டம் பழநியில் புதிய சிலை பிரதிஷ்டை செய்ததில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று பழநி வந்தனர். மேலும், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான நவபாஷாண சிலையைக் கடத்த முயற்சி நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் 2004-ல் கருவறையில் உள்ள நவபாஷாண சிலையை மறைத்து புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நவபாஷாண […]